ஐந்து பேர் ஐந்து செய்தி

கமல்ஹாசனின் கவிதைகள் நூறை எட்டியுள்ளதாம். கால் முறிவு ஏற்பட்டதும் அவர் செய்த பணி இந்தக் கவிதைத் தொகுப்பு முயற்சி என்கிறார்கள்.  "மய்யம்' சார்பில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறதாம்.
ஐந்து பேர் ஐந்து செய்தி

• கமல்ஹாசனின் கவிதைகள் நூறை எட்டியுள்ளதாம். கால் முறிவு ஏற்பட்டதும் அவர் செய்த பணி இந்தக் கவிதைத் தொகுப்பு முயற்சி என்கிறார்கள்.  "மய்யம்' சார்பில் கவிதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறதாம்.

• பகத் பாசில், துல்கர் சல்மான் இருவரும் ஆண்டிற்கு ஒரு படம் தமிழில் நடிக்கப் போகிறார்களாம். மலையாளத்தில் இரு படங்களின் சம்பாத்தியத்தை தமிழில் ஒரே படத்தில் பெறுவதுதான் இதன் நோக்கம்.

• தமிழில் வெற்றி பெற்ற "விக்ரம் வேதா' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. மாதவன் - விஜய் சேதுபதி பாத்திரங்களில் வெங்கடேஷ்-ராணா நடிக்க உள்ளனர்.

• "டிராபிக் ராமசாமி' வேடத்தில் நடிப்பதற்காக அவரின் பேச்சு, அணுகுமுறை - பாவனைகளை உள்வாங்கிக் கொள்ள - அவரை இரண்டுமுறை  சந்தித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

• நடிகை கே.ஆர்.விஜயாவின் மகள் ஹேமலதா பிரபல நிறுவனங்களின் விளம்பரத்துக்கு உதவும் டிஜிட்டல் நிறுவனத்தை பெங்களூருவில் நடத்தி வருகிறார். இவரின் மிகப் பெரிய பொழுதுபோக்கு வன விலங்குகளைப் படம் எடுப்பது. 
-மலர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com