அப்பாவே என் முன்னோடி

திரைப் பயணத்தில் 20 ஆண்டுகளை கடந்து விட்டார் சூரி. 1996-ஆம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும்
அப்பாவே என் முன்னோடி

திரைப் பயணத்தில் 20 ஆண்டுகளை கடந்து விட்டார் சூரி. 1996-ஆம் ஆண்டு மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவர், தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகத் திகழ்கிறார். இது குறித்து அவர் பேசும் போது,  "சென்னையில் தங்குவதற்கும், சாப்பிடுவதற்கும் பணம் தேவைப்பட்டது. ஆகையால் சினிமாவில் அரங்குகள் அமைக்கும் போது பெயிண்ட் அடிக்கும் பணிக்குச் சென்றேன்.  நண்பர்களுடன் இணைந்து காமெடி நாடகங்கள் போடுவேன். வீரப்பன் கதையை மையமாக வைத்து நாடகம் போட்டதற்கு, அதைப் பார்த்த காவல்துறையினர் 400 ரூபாய் பரிசாக அளித்து பாராட்டினார்கள். "காதல்', "தீபாவளி' படங்களில் சில காட்சிகளில் நடித்தேன். அஜித்துடன் "ஜி' படத்தில் ஒரு காட்சியில் வந்தேன். "வெண்ணிலா கபடி குழு' படத்தில் சுசீந்திரன் வாய்ப்பு தந்தார்.  முதலில் சிறுவேடமாக இருந்ததை, பின்னர் சில காட்சிகள் இணைத்து பெரிய கதாபாத்திரமாக உருவாக்கினார். அப்படத்தில் வரும் "புரோட்டா காமெடி'யால் இந்நிலைமைக்கு வந்துள்ளேன். நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு அவர்கள் சம்மதிக்க வேண்டும். கதாநாயகன் ஆசை எனக்கு கிடையாது. நகைச்சுவை கலைஞன் என்பதுதான் என் அடையாளம். அதை தக்க வைக்கவே ஓடிக் கொண்டிருப்பேன். என் காமெடிக்கு முன்னோடி என்றால் என் அப்பாதான். அவரின் காமெடியில் இன்னும் 10 சதவீதத்தை கூட நான் சினிமாவில் செய்யவில்லை. அவர் அப்படியொரு காமெடி மன்னன்'' என்றார் சூரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com