ஒருவரே பாடிய "டூயட்'

1942-இல் ‘Pahili Mangalagaur' என்ற பெயரில் ஒரு மராத்தி படம் வெளிவந்தது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் பற்றிய கதையம்சம் கொண்ட படம் இது.
ஒருவரே பாடிய "டூயட்'

1942-இல் ‘Pahili Mangalagaur' என்ற பெயரில் ஒரு மராத்தி படம் வெளிவந்தது. பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட  திருமணம் பற்றிய கதையம்சம் கொண்ட படம் இது. இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகம்  ஆனவர் யார் தெரியுமா?
 லதா மங்கேஷ்கர்..!

ஒரு கட்டத்தில் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பின்னணி பாட ஆரம்பித்தார். "Half ticket' என்ற பெயரில் வெளிவந்த ஒரு படத்தில் டூயட் பாடல் ஒன்று "Aake seethi lugi' என ஆரம்பிக்கும். இதனைப் பாட கிஷோர் குமார் தயாராக இருந்தார்.

னால் கூட பாட வேண்டிய லதா மங்கேஷ்கர் வரவில்லை. கடைசியில் அந்த  பாடல்..   வேறொருவரை பாடச் சொல்லி ரெக்கார்டு செய்யப்பட்டது.  லதா குரலில் பாடியவர் கிஷோர் குமாரேதான்!  அவரே குரலை மாற்றிக்கொண்டு, டூயட்டைப் பாடி முடித்து விட்டார். எப்படி இருக்கு?
- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com