வலையில் பிடித்தவை...

அதிகமான ஆட்டோவில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மருத்துவமனையில்கூட எழுதப்படவில்லை
வலையில் பிடித்தவை...

* தனிமை ஒரு விதத்தில் பலம், பல விதங்களில் கொடுமை தான் !
-மீனம்மா

* இறந்தவர் பெயரில் ஆதார் அட்டை கேக்குறிங்களே அது நியாயமா ?
இறந்தவர் பெயரில் வரும் பென்சனை ஆட்டையை போடுறியே அது நியாயமா ?
-பழனியாண்டி பிள்ளை

* அதிகமான ஆட்டோவில் எழுதப்பட்டுள்ளது. ஆனால், ஒரு மருத்துவமனையில்கூட எழுதப்படவில்லை
 "பிரசவத்திற்கு இலவசம்'
-இ.கே.ஆர்.

* ஜப்பானில் உள்ள பள்ளிக்கூடத்தில் உணவு இடைவேளையை "லஞ்ச் பிரேக்' என்று அழைப்பதில்லை. உணவு அருந்தும் வகுப்பு என்றே சொல்லித்தருகிறார்கள். குழந்தைகளுக்கு உணவு அருந்தும் முறை, தட்டு, பாத்திரங்களைக் கழுவி வைக்கவும் கற்றுத் தருகிறார்கள்.  நம்ம ஊரில்...?
-எஸ்.பானு

* சென்னையில் உள்ளவர்களுக்கு ஓலா ஒரு வரப்பிரசாதம்தான்.. சின்மயா நகரிலிருந்து கேகேநகரில் உள்ள பிட்ஜி சென்டருக்கு மகளை பைக்கில் ட்ராப் செய்யவேண்டும்.. நல்ல மழை! உடனே மகளை ஓலா ஆப்பை டவுன்லோடு செய்து புக்செய்தேன் அடுத்த 2~நிமிடத்தில் ஆட்டோ வந்தது.. வந்தது மட்டுமல்ல தனியாக மகளை அனுப்பிவிட்டு ரூட்-ட்ராக்கில் வண்டி சரியான பாதையில் செல்கிறதாவென வீட்டிலிருந்தே கண்காணிக்கவும் முடிகிறது... அதைவிட அதற்கான கட்டணம் ரூ.30 மட்டுமே... வழக்கமா 75~100 ரூபாய் வரை வாங்குவார்கள்.. அதற்கே மூச்சிரைக்க பேரம் பேசணும்!

வேறு ஆட்டோவாக இருக்கும் பட்சத்தில் நானும் உடன் சென்று திரும்ப வேண்டும். கட்டணம் இரண்டு மடங்கு செலுத்துவது மட்டுமல்ல நேரவிரயமும் ஆகும்!
-ரகுபதி

* சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்திருந்தேன். சிங்கப்பூரில் தொலைபேசியில் பேசுவது போன்றே சென்னையிலும் "வணக்கம், ஆமருவி பேசறேன்,' என்று நான் தொடர்பு கொண்டு பேசியவர்களில் பெரும்பாலானவர்கள்  "ம்ம், ஹல்லோ ஸôர், ஹவ் ஆர் யூ?' என்றே பேச்சைத் துவங்கினர். 

இரண்டு நிறுவனங்களுடன் பேசிய போதும் "வணக்கம்' என்றவுடன் அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் கொஞ்சம் திணறி, பின்னர், "குட் மார்னிங் ஸார்' என்று சமாளித்தனர். தமிழில் பேசினாலும் ஆங்கிலத்தில் பதில் அளிக்கவே விரும்பினர்.

ஒரு கூரியர் அனுப்ப வேண்டியிருந்தது.  "அட்ரஸ் எழுதுங்க ஸார்' என்றார் அந்த அலுவலகப் பெண். "இதோ இருக்கேம்மா,' என்று உறையின் மேல் எழுதப்பட்டதைக் காண்பித்தவுடன், "ஓ! அதுவா... தமிழ்ல இருக்கேன்னு பார்த்தேன்' என்றார் அவர். தஞ்சாவூரில் ஓர் உணவகத்தில் "வெந்நீர் குடுங்க' என்றதற்கு "ஹாட் வாட்டரா?' என்று கேட்டுச் சென்றார் உணவு பரிமாறுபவர்.

மற்ற மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளதா? தாய்மொழியில் பேசுவதை மக்கள் விரும்புவதில்லையா?
 -"ஆமருவி' தேவநாதன்
- சந்திர.பிரவீண்குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com