360 டிகிரி

"என் தந்தை எனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது ""ராஜையா'' என்ற இன்னொரு பெயரைக் கொடுத்துவிட்டார். சென்னை வந்தபின்,

ஞானதேசிகன்
* "என் தந்தை எனது ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போது ""ராஜையா'' என்ற இன்னொரு பெயரைக் கொடுத்துவிட்டார். சென்னை வந்தபின், தன்ராஜ் மாஸ்டர் என்பவர் என்னை "ராஜா' என்று அழைப்பார். பஞ்சு அருணாசலம்தான் "இளையராஜா' என்று மாற்றுப்பெயர் சூட்டினார்''.
இளையராஜா சொன்னது.
- போளூர் சி.ரகுபதி
பெயர் விளக்கம்
* பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் முழுப் பெயர் என்ன தெரியுமா? (S) ஸ்ரீபதி (P) பண்டித ராயுல பாலசுப்பிரமணியம். இதேபோல் ஜே.பி. சந்திரபாபுவின் பெயரிலுள்ள ஜே.பி. என்ற எழுத்துகள் ஜோஸப் பிச்சை என்பதைக் குறிக்கும்.
* ஆண் குரல் மட்டுமே பாடிய படம் "ஒருதலை ராகம்'. பெண் குரல் மட்டுமே பாடிய படம் "கற்பகம்.
* உலகில் 14,995 அணு சக்தி ஆயுதங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 9 நாடுகள் அணுசக்தி ஆயுதங்கள் உள்ள நாடுகளாக மதிக்கப்படுகின்றன. அவை: வட கொரியா, சைனா, இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, இஸ்ரேல், பிரான்ஸ் ஆகிய நாடுகள். 
* தமிழில் கிடைத்த மிகப் பழமையான செப்பேடு "பள்ளங்கோயில் செப்பேடு' ஆகும். பல்லவரின் இந்தச் செப்பேடு காவிரி வரை விரிந்திருந்த பல்லவப் பேரரசின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளது.
* எங்கும் எவரும் தமிழில் பேச வேண்டும் என்னும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. புதிய தமிழ் உரைநடையின் தந்தை என்றும், மேடைப் பேச்சின் தந்தை என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.
* "பிளாஸ்டிக் கப்'களில் தேநீர் அருந்த வேண்டாம்.
* சூடான சிப்ஸ் போன்ற உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் பையிலிருந்து எடுத்து உண்ண வேண்டாம்.
* பிளாஸ்டிக் பாத்திரத்தை மைக்ரோவேவ் அவனில் வைத்து மீண்டும் சூடுபடுத்த வேண்டாம். உஷ்ணப்படுத்தப்படும் பிளாஸ்டிக், வேதியியல் பொருட்களை உண்டாக்குகிறது. அந்த வேதிப் பொருட்கள் 52 வகையான புற்றுநோய் தோன்ற வழி வகுக்கிறது. புற்றுநோய்க்கான காரணத்தைக் கூறிய அமெரிக்க மருத்துவச் சங்க அறிக்கை இது!
- வை. பஞ்சாபகேசன்
* முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறுநீரைப் பெருக்கும்.
-ஆர். மீனாட்சி
* தமிழ்த் திரைப்படத்தில் முதன்முதலாக ஒரு கதை வசனகர்த்தாவுக்கு தனியாக டைட்டில் கார்டு போட்டதும் அதைப் பார்த்து ரசிகர்கள் பலமாக கை தட்டியதும் அறிஞர் அண்ணாவின் "வேலைக்காரி' படத்தில்தான்.
* திரைப்பட வரலாற்றிலேயே முதன்முதலாக 609 பிரிண்ட்டுகள் போடப்பட்டது "சந்திரலேகா' படத்துக்குத்தான்.
* "ஹரிதாஸ்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பத்து படங்களில் நடிக்க தியாகராஜ பாகவதருக்கு வாய்ப்புக் கிடைத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும்விதமாக அந்த பத்து படங்களின் பெயர்களை தன் புகைப்படத்துடன் இணைத்து வெளியிட்டு தன் சொந்தச் செலவில் விளம்பரம் செய்தார் தியாகராஜ பாகவதர்.
* சின்னஞ்சிறுமியாக காட்சியளிக்கும் இந்தப் பெண் நன்றாகப் பாடுவாளா? என்று தயாரிப்பாளர் கேட்டபோது ""எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மிக நன்றாகப் பாடுவாள்'' என்று உறுதிமொழி கொடுத்து அந்தச் சிறுமியைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் ஜி. ராமநாதன். அவர் நம்பிக்கை பொய்க்காமல் அவர் பரிந்துரைத்த ஜிக்கி பாடிய "உலவும் தென்றல் காற்றினிலே' மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
- வி.ந.ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com