காதல் பிரச்னையை பேசும் "தொட்ரா'

ஜே.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தொட்ரா'. சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் இப்படத்தை
காதல் பிரச்னையை பேசும் "தொட்ரா'

ஜே.எஸ். அபூர்வா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "தொட்ரா'. சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் இப்படத்தை கே.பாக்யராஜின் உதவியாளர் மதுராஜ் எழுதி இயக்குகிறார். பிருத்விராஜன் கதாநாயகனாக நடிக்கிறார். வீணா கதாநாயகியாக அறிமுகமாகிறார். சரவணகுமார், ஏ.வெங்கடேஷ், மைனா சூசன், தீப்பெட்டி கணேசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... இன்று இருக்கக்கூடிய சமூக சூழலில் உறவுகள் எப்படி மதிக்கப்படுகின்றன? பண ஏற்றத்தாழ்வுகள், பிரிவினை ஏற்றத்தாழ்கள் என்ற இரண்டும்தான் உறவுகளை இணைப்பதோ பிரிப்பதோ செய்கின்றன. மிகப்பெரிய பணம் உள்ளவர் சாதி ரீதியாக அடித்தட்டில் இருந்தாலும் மேல்தட்டில் உள்ளவர்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள தடையிருப்பதில்லை. பணமற்றவர்கள் தங்கள் மனதின் தேடலை நிறைவேற்றிக்கொள்ள முயலும்போதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது. அப்படி ஒரு பிரித்தாளும் கும்பல் எல்லா பகுதிகளிலும் உள்ளது. சிங்கத்திடமிருந்து தப்ப முதலை வாய்க்குள் மாட்டிக்கொள்வது போல அங்கே காதலும் காதலர்களும் சிதைக்கப்படுகிறார்கள். காதல் என்றாலே பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ளத்தான் வேண்டும்.. இதில் வீட்டைவிட்டு வெளியேறும் காதலர்கள் எதிர்கொள்ளும் போராட்டம் கடினமான ஒன்று. அதிலும் அவர்கள் வழிமாறிப்போய் சிலரின் கையில் சிக்கிக்கொண்டால்...? இப்படியான விவாதத்தைதான் இந்த திரைக்கதையின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன் என்றார் இயக்குநர். கன்னடத்தில் "ஆப்தமித்ரா}2'வுக்கு இசையமைத்த உத்தமராஜா இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். படத்தொகுப்பு: ராஜேஷ் கண்ணன்; ஒளிப்பதிவு: ஆஞ்சி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com