குளிர்காலத்தில் "சொரியாஸிஸ்' ஏற்படாமல் தடுப்பது எப்படி?

நம் உடலின் சருமம் லேசாக உலரும்போது ஏற்படும் அரிப்பை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கலாம்.
குளிர்காலத்தில் "சொரியாஸிஸ்' ஏற்படாமல் தடுப்பது எப்படி?

நம் உடலின் சருமம் லேசாக உலரும்போது ஏற்படும் அரிப்பை நாம் எல்லோரும் உணர்ந்திருக்கலாம். குறிப்பாக குளிர்காலத்தில் காற்றில் அதிகரிக்கும் ஈரத் தன்மை, குளிர், சூரிய ஒளிக் குறைவு ஆகியவைகளால் தோல் உலர்ந்து அரிப்பை ஏற்படுத்தும். தோல் கீழ்ப் பகுதியில் உள்ள செல்கள் வறண்டு அரிப்பு மற்றும் உலர்ந்த சிவப்பு நிற திட்டுகள் ஏற்படுவதுண்டு. இந்த சிவப்பு நிற திட்டுகள் வலியை ஏற்படுத்துவதோடு வித்தியாசமான அளவில் உடல் முழுக்க பரவக்கூடும். இதையே "சொரியாஸிஸ்' என குறிப்பிடுவார்கள். குளிர் காலத்தில் ஏற்படும் இந்த அரிப்பை பரவ விடாமல் தடுப்பது எப்படி?
இதோ சில டிப்ஸ்..
* உங்கள் சருமத்தில் ஈரப்பதம் அதிகரிக்காமல் தடுப்பதன் மூலம் நமைச்சல், சிவப்பு நிற திட்டுகள் ஏற்படாமல் தடுக்கலாம். சருமத்தில் ஏற்படும் ஈரத் தன்மையை தவிர்க்க கோல்டு கிரீம்கள், மேற்பூச்சு தைலங்களை பயன்படுத்தலாம்.
* நீண்ட நேரம் வெந்நீரில் குளிப்பதன் மூலம் சருமத்தின் ஈரத்தன்மையை குறைக்க முடியும். நுரை அதிகரிக்கும் வகையிலான சோப்பை பயன்படுத்தி வெந்நீரில் குளிப்பது நல்லது.
* குளுமையான பருவநிலை உங்கள் சருமத்தில் நமைச்சலை உண்டாக்கும். நீங்கள் வெளியில் செல்லும்போது உடலை பாதுகாக்கும் வகையில் தலைக்கு குல்லா, கையுறைகள், ஸ்கார்ப் அணிந்து கொள்வது நல்லது.
* அதிகமாக தண்ணீர் குடியுங்கள். தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள உஷ்ணம் தணிந்து சிறுநீர் வெளிர் மஞ்சன் நிறத்தில் வெளியேறுவதை கவனிக்கலாம்.
* உடலை இறுக்கமாக வைத்திருக்க வேண்டாம். உடலில் உஷ்ணத்தை ஏற்படுத்த மஸôஜ் செய்வது, உடலை அழுந்த தேய்ப்பது நல்லது.
* உடலில் அரிப்பு ஏற்படுவதற்கு விட்டமின் டி குறைபாடும் முக்கிய காரணமாகும். விட்டமின் டி உணவு பொருட்களை சாப்பிடுவது நல்லது.
-அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com