மன்சூர் அகான் மகன் நடிப்பில்...

வாரிசுகள் வரிசையில் இணைகிறார் மன்சூர் அலிகான் மகன். "வேலை கிடைச்சுருச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான்.
மன்சூர் அகான் மகன் நடிப்பில்...

வாரிசுகள் வரிசையில் இணைகிறார் மன்சூர் அலிகான் மகன். "வேலை கிடைச்சுருச்சு' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தவர், இதுவரை சுமார் 250}க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மன்சூர் அலிகான் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பல விதங்களில் சினிமாவில் இயங்கி வருகிறார். இவரது மகன் துக்ளக் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "கடமான்பாறை'. மன்சூர்அலிகான் தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். கதையின் பிரதான கதாபாத்திரம் ஒன்றில் மன்சூர் அலிகானும் நடிக்கிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். மற்றுமொரு கதாநாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். கல்விச் சுற்றுலா செல்லும் நண்பர்கள், காட்டுப் பகுதிக்குள் திசை தெரியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். வன விலங்குகள் அச்சுறுத்தும் அந்த வனப்பகுதியிலிருந்து அவர்களால் வெளியேற முடியவில்லை. தகவல் தொடர்பு சாதனங்கள் இயங்காத சூழலில், அங்கிருந்து அவர்கள் வெளியே வந்தார்களா... அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் என்ன... என்பதை சுவாரஸ்ய பின்னணியுடன் சொல்லுவதே திரைக்கதை. ஆந்திர பிரதேசத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. ஜனவரி மாத வெளியீடாக படம் திரைக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com