360 டிகிரி

"இந்தியன் ரோலர்' பறவைக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிஸô மற்றும் தெலங்கானா மாநிலங்களின் மாநிலப் பறவை இது.

* "இந்தியன் ரோலர்' பறவைக்கு ஒரு தனிப்பெருமை உண்டு. ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, ஒடிஸô மற்றும் தெலங்கானா மாநிலங்களின் மாநிலப் பறவை இது.

* நம்மால் ஒரு கண்ணைத் திறந்துகொண்டு தூங்க இயலாது. வாத்து எப்போதும் ஒரு கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டுதான் தூங்குமாம். எதற்கு? எதிர்பாராமல் வரும் எதிராளியின் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்துகொள்ளத்தானாம்.

* சின்ன ஹெரான் பறவை ஒரு தந்திரமான பறவை. தனது இறக்கையை நீரில் போட்டு, வடையை வைத்து எலியைப் பிடிப்பது போன்று, மீனைப் பிடித்து சாப்பிட்டு விடுமாம்.

* மரங்கொத்தி பறவையால், ஒரு விநாடிக்கு 20 தடவை கொத்த இயலும். ஒரு நாளைக்கு 12,000 தடவை கொத்துவதாகக் கண்டுபிடித்துள்ளனர். மரத்தைக் கொத்துவதால் அதன் அலகுக்கு பாதிப்பு உண்டா? கிடையாதாம். ஏன்.. அலகிலேயே அந்தத் தாக்கம் வெளியேற ஏதுவாய் காற்று வெளிப்படுத்தும் மெல்லிய துவாரங்கள் உண்டாம்!

வில்லுப்பாட்டு - விளக்கம்
வில்லிலிருந்து புறப்படும் அம்பு - இலக்கை அடைவதுபோல வில்லைக் குறியீடாக வைத்துக்கொண்டு வில்லுப்பாட்டுக் கலைஞரின் நாவன்மையான சொல்லிசை அம்பால் மக்களுக்குக் கருத்துகளை அடையச் செய்வர் என்ற காரணத்தால் வில்லுப்பாட்டு ஆனது.
திண்டிவனத்தில் நடந்த விவேகமூட்டும் வில்லுப்பாட்டு நூல் வெளியீட்டு விழாவில் கணேஷ் காந்தி.

தாய்க்கு வணக்கம் - புதிது
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை - என்பது ஒளவையாரின் கொன்றை வேந்தன் வாக்கு. கடவுளை வணங்குவதைவிடத் தாயை வணங்குவது சிறப்பு என்பது இதன் உட்கருத்து.
இதற்கேற்ப ஓர் அன்பர் தம் சொற்பொழிவைத் தொடங்கும்போது, ""தான் கண்ட உலகைத் தன் வயிற்றுள் காணாமல் கிடந்த எனக்கு என்னை உயிர்ப்பித்ததன் மூலம் காட்டிய என் தாயாம் தெய்வத்திற்கு முதல் வணக்கம்'' என்றார். உண்மையில் அம்மா என்றால் அம்மாதான்!
இப்படிப் புதுமையாய் வணக்கம் கூறியவர், முனைவர் வெ. கோபால். இவர் புதுச்சேரி அன்னை தெரேசா சுகாதார அறிவியல் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனக் கல்விப் பதிவாளர்.
புதுவை "குறளோடு விளையாடு' கூட்டத்தில் கேட்டது.
தொகுப்பு: தெ. முருகசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com