டென்ஷனை தவிர்ப்போம்!

மனிதனின் கொதிநிலை அதிகரிக்கும்போது டென்ஷன் உண்டாகிறது. டென்ஷனை சமாளிப்பது எப்படி?
டென்ஷனை தவிர்ப்போம்!

மனிதனின் கொதிநிலை அதிகரிக்கும்போது டென்ஷன் உண்டாகிறது. டென்ஷனை சமாளிப்பது எப்படி?

* மனதில் பாறாங்கல்லாய் கனக்கும் பிரச்னையை, பதட்டத்தை, அந்தரங்க துயரத்தை உங்கள் ஆத்மார்த்தமான நண்பர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பகிர்ந்து கொள்ளுங்கள். அதனால் துக்கம் குறையும்; மனம் லேசாகும்.

* கொஞ்ச நேரம் பாதிப்புக்குள்ளாக்கிய பிரச்னையிலிருந்து விலகி சினிமா, நாடகம், கடற்கரை, விளையாட்டு, நூலகம் என எதிலாவது ஈடுபடுங்கள்.

* முன்கோபத்தைக் கட்டிப் போட வேண்டும். டென்னிஸ், நடனம், நீச்சல், ஓட்டம் ஆகியவை படபடப்பைத் தவிர்க்க உதவும்.

* விட்டுக் கொடுங்கள். உங்கள் மீது சிறு தவறும் இல்லை என்றாலும் உங்கள் மீது சுமத்தப்படும் பழிக்காக வருந்தாதீர்கள்.

* ஒரு வேலையை மட்டுமே ஒரு நேரத்தில் செய்யுங்கள். பல பணிகளை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள். அவசரப்படாதீர்கள். ஆத்திரமூட்டுவது அவசரத் துடிப்புதான்.

* எது நல்லதாகப் படுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்.

* விமர்சனங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். நண்பர்களின் நல்ல குணங்களைப் பாருங்கள். பூதக் கண்ணாடிகொண்டு குறைகளைப் பார்க்காதீர்கள். நல்லதை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

* உங்களோடு போட்டியிட வருபவருக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதற்கு முன் நீங்கள் ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

* உங்களை ஒதுக்கித் தள்ளும்போது உங்களை நிறுவ முயற்சி செய்யுங்கள்.

* டென்ஷனைத் தவிர்க்க பொழுதுபோக்குகள் உதவும்.
- தங்க. சங்கரபாண்டியன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com