கவனத்துக்குரிய ஒளிப்பதிவு

"திருட்டு பயலே 2' படத்தில் செல்லதுரையின் ஒளிப்பதிவு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் அடையாளம் பெற்றுள்ளார் செல்லதுரை.
கவனத்துக்குரிய ஒளிப்பதிவு

"திருட்டு பயலே 2' படத்தில் செல்லதுரையின் ஒளிப்பதிவு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சுமார் 20 ஆண்டு கால போராட்டத்துக்குப் பின் அடையாளம் பெற்றுள்ளார் செல்லதுரை. இது குறித்து அவரிடம் பேசும் போது, ""அடையாளமும், அங்கீகாரமும், வெளிச்சமும் இல்லாத வாழ்க்கை ரொம்பவே வெறுமையானது. ரசிப்பதற்கும், ஸ்பரிசிப்பதற்கும், பறிப்பதற்கும், தொடுப்பதற்கும் விரல்கள் இல்லாமல் பூத்து பூத்து உதிர்ந்துக் கொண்டு இருப்பவர்கள் என நினைத்தாலே மனம் எங்கெங்கோ அலைகிறது. திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம் பட்டி கிராமத்தில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறியவன் நான். பல வித போராட்டங்களுக்குப் பின் ஒளிப்பதிவாளர் கே. வி. ஆனந்த் தனது படங்களுக்கு உதவியாளராக சேர்த்துக் கொண்டார். "காதல் தேசம்', "நேருக்கு நேர்' தொடங்கி "கவண்' வரைக்கும் அவரிடம் பணியாற்றிய அனுபவம் உண்டு. இடையில் அவ்வப்போது கிடைக்கிற வாய்ப்புகளில் தனியாகவும் ஒளிப்பதிவு செய்து வந்தேன். கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அப்படி செய்த படங்களுக்கும் இங்கே தனி இடம் உண்டு. "அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தில் அறிமுக ஒளிப்பதிவாளர் இடம் கிடைத்தது. சுந்தர்.சியின் "நகரம்' தனித்துவமான படமாக அமைந்தது. ஏவி.எம்.மின் "முதல் இடம்' பெரும் அடையாளமாக மாறிப் போனது. இப்படி பல படங்களில் வேலை பார்த்தாலும், இடையில் கே.வி.ஆனந்த் சாரிடமும் வேலை பார்த்தேன். இப்போது "திருட்டு பயலே 2' எனக்கென பெருமையான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு முக்கியமான கட்டம். வாய்ப்பு தந்த ஏஜிஸ் சினிமா நிறுவனத்துக்கும், இயக்குநர் சுசி கணேசனுக்கும் நன்றிகள். தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்து சேர வேண்டும் என்பது என் ஆவல்'' என்றார் செல்லதுரை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com