ஐந்து பேர் ஐந்து செய்தி

"பாரதி விஜயம்' என்ற நூலை சந்தியா பதிப்பகம் புத்தகத் திருவிழாவின் போது வெளியிடுகிறது. மகாகவி பாரதியின் 65 நண்பர்களின்
ஐந்து பேர் ஐந்து செய்தி

"பாரதி விஜயம்' என்ற நூலை சந்தியா பதிப்பகம் புத்தகத் திருவிழாவின் போது வெளியிடுகிறது. மகாகவி பாரதியின் 65 நண்பர்களின் அனுபவங்கள், பாரதி பற்றி இதுவரை வெளிவராத  தகவல்களைக் கொண்ட தொகுப்பு இது. 1,000 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுப்பின் விலையும் 1,000 ரூபாய்.

எழுத்தாளர் சரவணன் சந்திரன், பழனிக்கு அருகில் விவசாயப் பண்ணையை நிறுவி அங்கே இருக்கிறார். இந்தப் புத்தக திருவிழாவிற்கு "பாவத்தின் சம்பளம்', "மதிகெட்டான் சோலை', "எக்ஸ்டஸி', "பார்பி' என நான்கு நாவல்களை எழுதி வெளியிடுகிறார்.
 

கவிஞர்கள் சசிகலா பாபு, பத்மஜா நாராயணன்(படம்) ஆகியோர் தற்போது மொழிபெயர்ப்பாளர்களாகவும் உருவெடுத்துவிட்டனர். அவர்கள் மொழிபெயர்த்த புத்தகங்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கிறார். தினமும் அவரை வரவழைத்து படம் பற்றி விவாதித்து வருகிறார் மணிரத்னம். இது புதிய அனுபவமாக இருப்பதாக நண்பர்களிடம் சொல்லி நெகிழ்கிறார் சிம்பு.

தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், அந்தப் பணி முடிவடைந்ததும் பூமணியின் "வெக்கை' படத்தின் ஸ்கிப்ட் வேலைகளில் இறங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com