
ஜூலியட்டாக வரலட்சுமி
Published on : 17th July 2017 11:42 AM | அ+அ அ- |

ஜூலியட்டாக வரலட்சுமி சரத்குமார், ரோமியோவாக சல்சா மணி நடித்த "ரோமியோ ஜூலியட்' இசை நாடகம் கடந்த வாரம் சென்னையில் அரங்கேறியது. இதன் இயக்குநர் ஜெப்ரி வரதன். இதுகுறித்து வரலட்சுமி கூறுகையில், "சினிமாவில் நடனம் ஆடும்போதோ, நடிக்கும்போதோ தவறு நடந்தால் ரீடேக் எடுக்கலாம். மேடையில் நடிப்புக்கும், நடனத்துக்கும் ஒரே டேக்தான். அதெல்லாம் தெரிந்துதான் ரோமியோ ஜூலியட் இசை நாடகத்தில் நடிக்க முடிவு செய்தேன். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புதல் பெறப்பட்டு அவரது பாடல்களும் இந்த இசை நாடகத்தில் இடம்பெற்றது. இந்த இசை நாடகத்தை தொடர்ந்து நடத்துவதனால் சினிமாவில் நடிப்பது எந்தவிதத்திலும் பாதிக்காது'' என்றார். இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், விஷால், விஜய் சேதுபதி, சித்தார்த், இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.