ஐந்து பேர் ஐந்து செய்தி

ராம்ராஜ் காட்டன் அதிபர் நாகராஜன் ஒரு புத்தக விரும்பி. தன் வெற்றிக்குக் காரணமான புத்தகங்கள் என அவர் 5 நூல்களைக் குறிப்பிடுகிறார்.
ஐந்து பேர் ஐந்து செய்தி

• ராம்ராஜ் காட்டன் அதிபர் நாகராஜன் ஒரு புத்தக விரும்பி. தன் வெற்றிக்குக் காரணமான புத்தகங்கள் என அவர் 5 நூல்களைக் குறிப்பிடுகிறார். பகவத் கீதை, காந்திஜியின் சத்திய சோதனை, சிவகுமாரின் இது ராஜபாட்டை அல்ல, வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர், மனவளக் கலை.

• நடிகர்கள் அரவிந்த்சாமி, கிட்டி இருவரும் இணைந்து Talent Maximus என்ற மனித வள மேம்பாட்டு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் இவர்கள் சிறந்த ஹெச்ஆர் நிர்வாகிகளை உருவாக்கி வருகின்றனர். 

• எழுத்தாளர் கோணங்கியின் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூலை பெங்குவின் பதிப்பகம் வெளியிடவுள்ளது.

• கவிஞர் ஆத்மநாம் அறக்கட்டளை சிறந்த கவிதைக்கான பரிசை அனார் எழுதிய "பெருங்கடல் போடுகிறேன்' தொகுப்புக்கு வழங்குகிறது.  சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது சத்தியமூர்த்தி ஐஏஎஸ்., எழுதிய "தாகம் கொண்ட மீனொன்று' நூலுக்குக் கிடைத்திருக்கிறது. 

• எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திரைப்பட இயக்குநர் மணி ரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரி
கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com