கடவுளும் மனிதனும்...

இயக்குநர் வேலு பிரபாகரனின் உதவியாளர் யு.எம்.முத்து இயக்கியுள்ள குறும்படத்துக்கு வெள்ளித்திரை
கடவுளும் மனிதனும்...

இயக்குநர் வேலு பிரபாகரனின் உதவியாளர் யு.எம்.முத்து இயக்கியுள்ள குறும்படத்துக்கு வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்துள்ளது.  வேலு பிரபாகரனின் உதவியால் பெரும் திரையில் இப்படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் முத்து.  ஜே.கே.ஸ்டுடியோஸ்  தயாரிப்பில் "விதி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் இணைய தளங்களில் பரவலான வரவேற்புகளைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்படம் வெள்ளித்திரைக்கு வருகிறது. இது குறித்து யு.எம்.முத்து பேசும் போது... "என்னதான் விஞ்ஞான யுகம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தாலும், நாம் பேசி விட முடியாத நபர் கடவுள். அப்படி பேச முடிந்தால் ஒரு மனிதன் அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்பான். அதற்கு கடவுளின் பதில் என்னவாக இருக்கும் என்பதன் கற்பனை உருவாக்கம்தான் இந்தப் படம்.  மனித உடலில் உயிர் எங்குள்ளது...  எந்த ஒரு ஜீவராசியாலும் மரணத்தை வெல்ல முடியவில்லையே அது ஏன்?  மனித இனம் விதியை மதியால் வெல்ல முடியும் என்று சொல்கிறது.  அப்படி மனித இனம் விதியை மதியால் வென்று விட்டால் கடவுளையே வென்றதாகிவிடுமா... கடவுளால் முடியாத காரியம் எது? இது போன்ற பல கேள்விகளுக்கு கடவுளின் பதில் என்ன? 
என்பதுதான் படத்தின் கதைக்களம்...'' என்கிறார் முத்து.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com