பிடித்த பத்து: ஏ.எம். சுவாமிநாதன், இ.ஆ.ப: (ஓய்வு)

முன்னாள் தமிழக முதல்வர்கள் ஆறு பேரிடம் பணியாற்றியவரும், அரசு செயலர்களில் ஒருவரும், சேக்கிழார் ஆராய்ச்சி மையத் துணைத் தலைவருமான ஏ.எம். சுவாமிநாதன்
பிடித்த பத்து: ஏ.எம். சுவாமிநாதன், இ.ஆ.ப: (ஓய்வு)

முன்னாள் தமிழக முதல்வர்கள் ஆறு பேரிடம் பணியாற்றியவரும், அரசு செயலர்களில் ஒருவரும், சேக்கிழார் ஆராய்ச்சி மையத் துணைத் தலைவருமான ஏ.எம். சுவாமிநாதன், இ.ஆ.ப., (ஓய்வு) தனக்குப் பிடித்த பத்தை வரிசைப்படுத்துகிறார்: 
1.    குறளில், "கற்றதனால் ஆய  பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்'; குமரகுருபரரின் "செல்வம் என்பது சிந்தையின் நிறைவே; அசிசி 
புனிதர் பிரான்ஸிசின் "கடவுளே, உலகத்தில் என்னால் மாற்றக் கூடியவைகளை மாற்றும் துணிவையும், மாற்ற முடியாதவற்றை ஏற்கும் பக்குவத்தையும், இவை இரண்டையும் பிரித்தறியும் ஞானத்தையும் எனக்குக் கொடு' - இவை எனக்கு மிகப் பிடித்த வாசகங்கள்.
2.    பிடித்த நண்பர்: 84 வயது மணி என்னும் சுப்பிரமணியம்.  எப்போதும் பிறரின் துன்பங்களில் பங்கு கொண்டு, அவர்களின் நலனுக்காக தினசரி பிரார்த்தனை செய்பவர்.
3.    உணவில் பிடித்தவை: அம்மாவின் பக்குவமான மைசூர்பாகு; தினசரி எல்லா வயதினரும் உண்ணக்கூடிய  ஆரோக்கிய  உணவான இட்லி அல்லது தோசை.
4.    பிடித்த பணி: ஆவின் நிர்வாக இயக்குநராக, பால் உற்பத்தி அதிகரிப்பு, பால் பொருள் உற்பத்திக்காக 3 ஆலைகள் அமைத்தது, புதிய  பால் பொருள்கள் அறிமுகப் படுத்தியது, இந்தியாவின் பல பகுதிகளில் இவற்றை விநியோகிக்கச் செய்தது.
5.    உலக அளவில் பிடித்த தலைவர்கள்: சத்தியாக்கிரகத்தை வழங்கிய  மகாத்மா காந்தி, எதிரிகளை மன்னித்து அவர்களுக்கும் பதவி வழங்கிய  நெல்சன் மண்டேலா, எளிமை-மனித நேயம்-தன்னம்பிக்கை-தலைமைப் பண்புக்கு எடுத்துக்காட்டான காமராஜர்.
6.    பயணங்களில் பிடித்தது: வெண்மையும், கம்பீரமும் மிகுந்த சிகரங்களும், பசுமையான பள்ளத்தாக்குகளும் கொண்ட இமய மலைத் தொடர். உலக அளவில் நியூசிலாந்தின் இயற்கைக் காட்சிகள்.
7.    எழுத்தாளர்களில்: புதிய  நடையோடு, சமூக பிரச்னைகளை வெளிப்படுத்தி, தத்துவங்களை லாகவமாகக் கையாண்ட  ஜெயகாந்தன், ஜெய மோகன், சுஜாதா, சிவசங்கரி.  கவிஞர்களில் மகாகவி பாரதி, கவிமணி, வாலி, கவிக்கோ.
8.    தத்துவஞானிகளில்: டி.ஜி. நாராயணசாமி, ஜக்கி வாசுதேவ், பால் கோய்லோ.  (அன்றாட வாழ்க்கைத் தத்துவங்களை, ஆன்மிக-இறைக்கொள்கைகளை, தம் விவாதங்களில் நம் நேரத்தை வீணாக்காமல் உணர்த்தக் கூடியவர்கள்.)
9.    இந்தப் பிரபஞ்சம்: பொது உலகில் நான் பணியாற்றும் இடம்; தனி உலகில் என் குடும்பம்.
10.    விரும்பும் பணி: தலாய் லாமா, மௌலானா வாஹிதுதீன் கான், அருட் தந்தை இருதயம் போன்றோரின் வழியில் சர்வ சமய  நல்லிணக்கத்துக்கு உதவுவது.  
- சாருகேசி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com