சுற்றுலாத் தலம்: ட்ரையுண்ட்

தர்மசாலாவின் "கீரிடத்தில் சூட்டிய ஆபரணம்' என  ட்ரையுண்ட்டை கூறுவர். இமாசலப் பிரதேசத்தின் காங்கரா ஜில்லாவில் உள்ள சிறிய மலைப் பகுதி இது.
சுற்றுலாத் தலம்: ட்ரையுண்ட்

தர்மசாலாவின் "கீரிடத்தில் சூட்டிய ஆபரணம்' என  ட்ரையுண்ட்டை கூறுவர். இமாசலப் பிரதேசத்தின் காங்கரா ஜில்லாவில் உள்ள சிறிய மலைப் பகுதி இது. 10 கி.மீ. ட்ரெக்கிங் செய்ய வசதியுண்டு. இதனால் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிவர். இந்த 10 கி.மீ. யில் முதல் 5 கி.மீ. தூரம் ரொம்ப சுலபம். ஆனால், கடைசி ஒரு கி. மீ.... மிக மிக ஜாக்கிரதையாக ஏற வேண்டும். காரணம் இதன் மேற்பகுதி 22 வளைவுகளைக் கொண்டது.

ஆமாம். தவுலாதர் பகுதி.. சிவாலிக் குன்றுகள்.. காங்கரா பள்ளத்தாக்கின் சமவெளி ஆகியவற்றை கண்கொட்டாமல் ரசிக்கலாம். பச்சைப்புல் பகுதிக்கும் பஞ்சமில்லை.

தரம் காட் காலு கோயிலிலிருந்து 6 கி.மீ. வழியெங்கும் தாக சாந்தி. சிறு உணவுக்கு கடைகள் உண்டு. வழியில் ஓக் மற்றும் தேவதாரு மரங்களைக் கொண்ட அடர்த்தியான காட்டை ரசித்தபடியே செல்லலாம்.

ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஏற்ற காலம் மார்ச் முதல் மே வரை! பிறகு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாதலால் பயணம் மிகக் கஷ்டம்.  மற்றொரு ட்ரெக்கிங் பாதை உள்ளது. ஆனால் அது கஷ்டமானது.  ஜுன் - ஜுலை மழைக்காலம்... பயணத்தைத் தவிர்க்க வேண்டும். மொத்தம் 10 கி.மீ. பயணிக்க 5 மணி நேரம் ஆகும்.  ட்ரையுண்டின் உச்சி 2,875 மீட்டரில் அமைந்துள்ளது.
ராஜிராதா, பெங்களூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com