"குயின்' தமிழ் ரீமேக்கில் நடிப்பது யார்? 

கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் "குயின்.' விகாஸ் பெஹல் எழுதி இயக்கிய இந்தப் படம் பெண் சுதந்திரத்தை
"குயின்' தமிழ் ரீமேக்கில் நடிப்பது யார்? 

கங்கனா ரணாவத் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் "குயின்.' விகாஸ் பெஹல் எழுதி இயக்கிய இந்தப் படம் பெண் சுதந்திரத்தை கதைக் களமாக கொண்டு உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் நடித்ததற்காக கங்கனாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மற்ற மொழி ரீமேக் உரிமைகளை வாங்குவதற்கு பலத்த போட்டி நிலவியது. 

கன்னட ரீமேக்கை ரமேஷ் அரவிந்த் இயக்குவதாகவும், அதில் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் கன்னட ரீமேக் உரிமை தங்களிடம் இருப்பதாக அறிவித்துள்ளது இங்கிலாந்தைச் சேர்ந்த கிராஃப் நிறுவனம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குயின்' படத்தின் தென்னிந்திய ரீமேக் உரிமையை வியாம்காம் 18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து நாங்கள் பெற்றுள்ளோம். தென்னிந்திய மொழி ரீமேக் உரிமை எங்களிடமே உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எந்த மொழியில் யார் இயக்குநர்.. யார் ஹீரோயினாக நடிப்பார்... என்பது குறித்தும் நாங்களே அறிவிப்போம்'' என்று அறிவித்துள்ளது கிராஃப் நிறுவனம்.  

இந்நிலையில் தமிழ் ரீமேக் உரிமைக்கு இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் நடிகர் தியாகராஜன். தனது ஸ்டார் மூவிஸ் நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கான வசனத்தை சுஹாசினி எழுதுவதாகவும், ரேவதி இயக்குவதாகவும் இருந்தது. ஆனால், தற்போது இதன் இணைத் தயாரிப்பாளராக இணைந்துள்ள தியாகராஜனே இந்தப் படத்தை இயக்கவும் செய்கிறார். 

கன்னடத்தில் "பட்டர்ஃபிளை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் கன்னடப் பதிப்பில் பரூல் யாதவ் நடிக்கிறார். இவர் நடித்த "ஆட்டக்கார' என்ற கன்னடப்படம், இவருக்கு சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதைப் பெற்றுத் தந்தது. பரூல் யாதவ் தமிழில் தனுஷுடன் "ட்ரீம்ஸ்', பிரசாந்துடன் "புலன் விசாரணை-2' படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் "குயின்' ரீமேக்கில் நாயகியாக நடிக்க தமன்னா முதலில் ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலக, அவருக்குப் பதில் காஜல் அகர்வாலிடம் பேசியிருக்கிறார்கள். அவரும் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

நாயகியின் தோழியாக எமி ஜாக்ஸன் மூன்று மொழிகளிலும் நடிப்பார் எனத் தெரிகிறது. 

"குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு "வானில் தேடி நின்றேன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com