தமிழில் ஈரானிய இயக்குநர்!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கும் "பியாண்ட் த கிளவுட்ஸ்' படம் தமிழிலும் தயாராகிறது.
தமிழில் ஈரானிய இயக்குநர்!

உலகப் புகழ் பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கும் "பியாண்ட் த கிளவுட்ஸ்' படம் தமிழிலும் தயாராகிறது. 1992-ஆம் ஆண்டு "பாதுக்' என்ற ஈரானியப் படத்தின் மூலம் இயக்குநர் ஆனவர் மஜித். தொடர்ந்து "சில்ரன் ஆஃப் ஹெவன்', "த கலர் ஆஃப் பாரடைஸ்', "பாரன்ஸ', 'த வில்லோ ட்ரீ' உள்ளிட்ட படங்களின் மூலம் சர்வதேச கவனம் பெற்றாôர். தற்போது இவர், "பியாண்ட் த க்ளவுட்ஸ்' என்ற படத்தை ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் இயக்கி வருகிறார். இதன் மூலம் இந்திய சினிமாவில் கால் பதிக்கிறார் மஜித். ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கட்டார், மாளவிகா மோகனன், ஜி.வி.சாரதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஹிந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று மொழி பின்னணியில், அதன் மூல அடையாளங்கள் மாறாமல், பாரம்பரியத் தன்மையுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. அண்ணன், தங்கை பாச, நேசம், அன்பை களமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com