விடா முயற்சியே வெற்றிக்கு வழி

ஒரு சாதாரண இளைஞனாக முத்தையா என்ற பெயரில் கையில் காசு இல்லாமல் சென்னைக்கு வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை மணலிலே படுத்து
விடா முயற்சியே வெற்றிக்கு வழி

ஒரு சாதாரண இளைஞனாக முத்தையா என்ற பெயரில் கையில் காசு இல்லாமல் சென்னைக்கு வந்து படுக்க இடமில்லாமல் கடற்கரை மணலிலே படுத்து காவலர்களால் அங்கிருந்து துரத்தப்பட்டவர்.  எந்த வேலை என்றாலும் செய்யத் துணிந்தார். சிகை அலங்காரம் செய்கிற கடையில் எனக்கு முடி வெட்டுவதில் பழக்கம் உண்டு என்று வேலையில் சேர்ந்தார்.  முதலில் ஒரு பத்திரிகையில் சாதாரண வேலையில் சேர்ந்தார். ஒருநாள் "உங்களுக்கு பிழைதிருத்தம் செய்யத் தெரியுமா?' எனக் கேட்டார்கள். துணிச்சலோடு "பிழை திருத்துவேன்' என்றார். அப்படியே அந்தப் பணியைத் தொடர்ந்தார். பாராட்டும் பெற்றார்.
 இன்னொரு நாள் பத்திரிகை ஆசிரியர் வராததால், அன்று அவர் எழுதிய தலையங்கம் அவர் தலைவிதியையே மாற்றியது.  அவர் அந்தப் 
பத்திரிகையில் ஆசிரியராக உயர்த்தப்பட்டார். சகிப்புத்தன்மை, விடாமுயற்சி, உழைப்பும் இருந்தால் யாருமே எந்த நிலையிலும் உயரலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த அவர்தான் கவியரசு கண்ணதாசன்.
"ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மேதை' என்னும் நூலிலிருந்து
-நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com