டுவிட்டரில் முதலிடம்

டுவிட்டர் தள வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரபலத்தை பத்து கோடி பேர்கள் தொடர்கிறார்கள்.
டுவிட்டரில் முதலிடம்

டுவிட்டர் தள வரலாற்றில் முதல் முறையாக ஒரு பிரபலத்தை பத்து கோடி பேர்கள் தொடர்கிறார்கள். அவர்தான் கடி பெர்ரி. இந்த செய்தியை அதிகார பூர்வமாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாடல்களை எழுதுவதுடன் பல பாடல்களைப் பாடி பிரபலமான பாடகர்களின் சர்வதேச பொதுப் பட்டியலில் கடி பெர்ரி முதல் இடம் பிடித்திருக்கிறார்.

இதுமட்டுமின்றி, இசைத் துறையில் அதிகளவில் வருமானம் ஈட்டும் பாடகி என்ற சிறப்பைப் பெற்றிருப்பவரும் கடிதான். கடி பெர்ரி பாடிய "ரோர்', "போன் அப்பிடிட்' போன்ற பாடல்கள் சர்வதேச அளவில் ஹிட்டாகியுள்ளன. 2009-ஆம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் கணக்கு தொடங்கிய கடி, மிகக் குறுகிய காலத்தில் பத்து கோடி தொடர்பவர்களைப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

கடி பெர்ரிக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பவர் கனடா நாட்டை சேர்ந்த பாடகரான ஜஸ்டின் பீபர். பீபரைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள் வரிசையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதல் இடத்திலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
-பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com