வெயிலும் வெள்ளரியும்! 

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்ட ஆசைப்பட்ட  காலம்  சிறு வயது. என்ன வெயில் காய்ந்தாலும்,
வெயிலும் வெள்ளரியும்! 

• வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லுக்கட்ட ஆசைப்பட்ட  காலம்  சிறு வயது. என்ன வெயில் காய்ந்தாலும், கிட்டிப் புல், கோலி, கிரிக்கெட் மட்டையை தோளில் சுமந்து சுற்றித் திரிந்த காலம் போய் இன்று வெயிலுக்குப் பயந்து பதுங்கித் திரிகிறார்கள். காரணம் உச்சத்தை தொட்டவெப்பநிலை!
• குடிக்கும் நீர், வியர்வையாக வெளியேறியதும் உடல் சோர்வு, உடம்பு வலி,  தொடர்ந்து சிறுநீர் எரிச்சல், கடுப்பு  ஒன்றன் பின் ஒன்றாக தொடர்வதை அறியாதவர் இல்லை. முக்கியமாக மதுமேக நோயாளிகளுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் ஏற்படும் இன்னல்கள் அதிகம். எண்ணெய்க் குளியலும், இளநீரும், நீர் மோரும், பழச் சாறும் மறந்து விட்டதே! 
• எந்த மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாலும், தண்ணீர் நிறைய குடிங்க, 3  முதல் 5  லிட்டர் வரை குடிங்க என்பார்கள். அப்படி குடித்தாலும் குடித்து குடித்து நீர் வெறுப்பு (water aversion) ஏற்பட்டு விடும். அதற்குத்தான் மழைக்காலத்தில் ஒதுக்கப்பட்ட நீர் காய்கறிகளான வெண்பூசணி, வெள்ளரி, புடலை, சுரைக்காய், முள்ளங்கி, செளசெள முதலியவற்றை கோடை காலத்தில் உணவில் அதிக அளவில் சேர்க்க வேண்டும். அவற்றில் சாலச் சிறந்தது வெள்ளரிக்காய். காயிலும் பிஞ்சு மிக நன்று. வெள்ளரியை குறுகலாக அறிந்து மிளகு உப்பு சேர்த்து பசி ஆற சுவைக்கலாம். 
• சாதாரணமாக எங்கும் வளரும் கொடி வகை கீரைக்காய். கக்கரிகாய் என்பர் கிராமப் புறத்தில். நாட்டுப்புறம் முதல் நகர்ப்புறம் வரை அனைவருக்கும் தெரிந்தது. சிறுநீரைப் பெருக்கும், உள்சூட்டை உடல் வெப்பநிலையைத் தணிக்கும். உடல் உரமாக்கும் செய்கை உடைய இனிப்பு சுவையுடைய மூலிகை. நீரிழிவு நோயாளிகளுக்கும் உகந்தது.
• வெள்ளரியில் அதிகமான நீர்ச்சத்து, குறைவான கலோரி, அதாவது 95%  நீர் சத்தும், வெறும் 16% கலோரி சத்துக்களும் கொண்டது (100 கிராம்-க்கு). கொழுப்பு சத்து மிகமிக குறைவு. வைட்டமின் A ,B1,B6, C, D இயற்கையாகவே உள்ளது. எனவே மதுமேக நோயாளிகளுக்கும் மிக உகந்தது. பித்தத்தை குறைக்கும் அற்புதத் தன்மை உடையது. முக்கியமாக ரத்த பித்தத்தை குறைக்கும் என்பதால் மூக்கில் இருந்தும், பல் ஈறுகளில் இருந்தும் ரத்தம் வடிவதை தடுக்கும். வைட்டமின் கே சத்து அதிகமான அளவு உள்ளது. நார்ச்சத்து பிஞ்சுகளில் அதிகம் உள்ளதால் கோடைகாலத்தில் வரும் மலச்சிக்கலையும் நீக்கும்.
• உடலை இளைக்க விரும்புகிறவர்கள், இந்த கோடை காலத்தில் வெள்ளரியை உபயோகித்துப் பயன்பெறலாம். வெள்ளரியை விதையோடு சேர்த்து சாப்பிட நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு குறையும். வயிறு குளிரும். பிஞ்சினை குறுக அறிந்து பித்தமணியாகிய மிளகும், சிறிது உப்பும் வைத்து சாப்பிட நீர்வேட்கை தணியும். கபம் மிகாது. 
இதில் மிளகாய் பொடி சேர்த்து சாப்பிட பித்தம் அதிகரித்து, உடல் எரிச்சல், வயிறு எரிச்சல், நாக்கு, வாய்ப் புண், குடல் புண், நாவறட்சி ஏற்படும். ஆகவே பித்த மணியாகிய மிளகு இட்டு சாப்பிட சித்த மருத்துவம் வலியுறுத்துகிறது.
- மரு.சோ. தில்லைவாணன், 
அரசு சித்த மருத்துவர், பேர்ணாம்பட்டு, 
வேலூர் மாவட்டம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com