360 டிகிரி

நடிகர் திலகம் நடித்து ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த "பார் மகளே பார்' திரைப்படத்தில் "சோ' மெட்ராஸ் பாஷை பேசி அறிமுகம் ஆனார். 

* பின்லாந்தில் டொனால்ட் டக் காமிக்ஸ் மற்றும் படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. காரணம் டொனால்ட் டக் பேண்ட் அணியாததுதான் என்று காரணம் கூறி விட்டனர்.
- நெ.இராமன், சென்னை.
* நடிகர் திலகம் நடித்து ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த "பார் மகளே பார்' திரைப்படத்தில் "சோ' மெட்ராஸ் பாஷை பேசி அறிமுகம் ஆனார். 
- நெ.இராமன், சென்னை.
* LOVE - "லவ்' அர்த்தம் தெரியுமா?
 "லவ்' என்ற ஆங்கில வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டால், உடனே "காதல்' என்று சொல்லி விடுவீர்கள்! ஆனால், இன்னொரு விஷயமும் இதில் உள்ளது. "லவ்' என்ற வார்த்தையில் உள்ள எல் - ஓ - வி - ஈ (L-O-V-E) என்ற நான்கு ஆங்கில எழுத்துக்கும் தனித்தனி பொருள் உண்டு!
எல் - பார்க்க... (L - Look) ஓ - கவனி... (O - Observe), வி - ஆராய்ந்தறி... (V - Verify), ஈ - அனுபவி... (E - Enjoy). இனிமேல் யாராவது "லவ்'வுக்கு இதையும் சேர்த்து சொல்வீர்கள்தானே!
- சி.ரகுபதி, போளூர்.
* உலகிலேயே பழமையான சினிமா தியேட்டர் அமெரிக்கா ஜார்ஜியாவில் உள்ளது. இது 1895-இல் கட்டப்பட்டது.
* உலகின் மிகப்பெரிய மணி ஜப்பானில் உள்ள புத்த ஷிண்டே கோயிலில் உள்ளது. உயரம் 50 அடி. விட்டம் 20 அடி.
* ஆப்பிரிக்காவில் மொத்தம் 53 சுதந்திர நாடுகள் உள்ளன.
 - முக்கிமலை நஞ்சன்
* வெட்டுக்கிளிக்குக் காதுகள் கால்களில் உள்ளன.
* பூச்சிகளில் வேகமாகப் பறப்பது தும்பி.
- அ.ராஜாரஹ்மான், கம்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com