வெயிலைச் சமாளிக்க...

இளநீருக்கு வயிற்றைக் குளுமைப்படுத்தி நஞ்சை அழிக்கும் சக்தி உண்டு. சன்னமான நுண்இழைகளும் இதற்கு உண்டாதலால்,
வெயிலைச் சமாளிக்க...

வெளியில் வெயில் கொளுத்துகிறது. 
வெப்பத்தை தாங்க இயலாமல், வயிற்றுக்குள் நம..நம...! 
வயிற்றில் புளிப்பு அமிலம் உருவாகாமல் தடுப்பது எப்படி?
வாழைப்பழம்
இதில் பொட்டாசியம் உள்ளது. ஆக வெயில் காலத்தில் நன்கு பழுத்த வாழைப் பழத்தைச் சாப்பிடுவதன் மூலம் அசிடிடியை 
விரட்டிவிட இயலும். மலச்சிக்கலையும் விரட்டும்.
இளநீர்
இளநீருக்கு வயிற்றைக் குளுமைப்படுத்தி நஞ்சை அழிக்கும் சக்தி உண்டு. சன்னமான நுண்இழைகளும் இதற்கு உண்டாதலால், வயிற்றுக்குள் ஜீரண உறுப்புகளின்  இயக்கமும் நன்றாக நடக்கும்.
தர்ப்பூசணி
இது உடலைக் குளிர்ச்சிப் படுத்துவதுடன் புளிப்பு அமிலம் உருவாவதையும் தடுத்து வயிற்றை காக்கும்.
வெந்நீர்
வெதுவெது வெந்நீரை சாப்பாட்டுக்கு முன்பும், பின்பும் சாப்பிட்டால் வயிற்றை உடனுக்குடன் சுத்தம் செய்வதுடன், அமிலம் ஏற்படவே வழியில்லாது செய்து விடும்.
குளிர்ந்த பால்
வயிற்றினுள் ஏற்படும் புளிப்பு அமிலத்தை விழுங்கிவிடும். நமைச்சலைத் தடுக்கும். வயிறு தொல்லை, நெஞ்சு எரிச்சலுக்கு சுத்தமான குளிர்ந்த பாலைக் குடித்தாலே போதும்.
மோர் மற்றும் தயிர்
இதில் உள்ள பாக்டீரியாக்கள் வயிற்றைக் குளிர்ச்சியாக வைத்து அமிலம் ஏற்படுவதையும் தடுத்துவிடும்.
- ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com