சென்னை உயர்நீதிமன்றம்!

  • புகழ் மிக்க சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது.
  • ஆங்கிலேய நாடாளுமன்றத்தில், 1861-இல் இயற்றப்பட்ட "இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டம்' அளித்த அதிகாரத்தின் அடிப்படையில், விக்டோரியா மகாராணியால், 1862-இல் வழங்கப்பட்ட உரிமைப் பட்டயம் (லெட்டர்ஸ் பேடன்ட்) மூலம் இந்திய நாட்டில் முதலில் மூன்று இடங்களில் உயர்நீதிமன்றங்கள் நிறுவப்பட்டன.
  • கடந்த 1862-ஆம் ஆண்டு, ஜூன் 26-இல் மூன்று உயர்நீதிமன்றங்களில் ஒன்றாக சென்னை உயர்நீதிமன்றம்((மற்றவை மும்பை, கொல்கத்தா) நிறுவப்பட்டது. இதன் நீதி பரிபாலணம் தமிழ்நாடு மற்றும் புதுவையை (பாண்டிச்சேரி) உள்ளடக்கியது.
  • தொடக்கத்தில் "சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்' என்று தான் அழைக்கப்பட்டது. அதன் பிறகு, "மெட்ராஸ் ஹை கோர்ட்' என்று பெயர் மாற்றப்பட்டது.
  • தற்போதுள்ள உயர்நீதிமன்ற கட்டடத்தின் கட்டுமான பணி நான்கு ஆண்டுகள் வரை நீடித்தது (1888-1892). உயர்நீதிமன்ற வளாக கட்டுமான செலவானது, சுமார் ரூ.12 லட்சத்து 98,163 ஆகும்.
  • இந்த வளாகத்தில் உள்ள மிக உயரமான மாட கோபுரத்திலிருந்துதான் கலங்கரை விளக்கு செயல்பட்டு வந்தது.
  • முதல் உலகப்போரின் தொடக்கத்தில், ஜெர்மனியின் எஸ்எம்எஸ் எம்டன் போர்க்கப்பல் குண்டு வீசியது. ஜெர்மன் தாக்குதலில் சேதமடைந்த பல இந்திய கட்டடங்களில், இது மட்டுமே இருக்கிறது என்றே கூறலாம்.
  • இந்த நீதிமன்றம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பின், 1878-இல் தான் முதல் முதலாக ஓர் இந்தியர் நீதிபதியாகப் பணியமர்த்தப்பட்டார். தெரு விளக்கில் படித்து, மேதையானார் என்று பலராலும் அந்நாளில் வியந்து போற்றப்பட்ட சர் டி.முத்துசாமி ஐயர் தான் அப்பெரியவர்.
  • சுமார் 17 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி, 1895-இல் மறைந்த முத்துசாமி ஐயருக்கு ஆங்கிலேய நீதிபதிகளே உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு பளிங்குச் சிலையை நிறுவினர்.
  • சர்.டி.முத்துசாமி ஐயர், நீதிமன்றத்தில் நடந்து கொண்ட விதம், நீதி தேவதையின் பால் கொண்ட பக்தியால் காலணி அணிந்து கொள்ளாமலேயே 17 ஆண்டுகள் அவர் பணியாற்றினார்.
  • சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிபதிகளுக்கான நூலகம், நீதிமன்ற செயல்பாடுகளுக்கான -இதயம்- என்றே அழைக்கலாம். இந்த நூலகத்தில், சென்னை சட்டங்கள் 1802 (ஙஹக்ழ்ஹள் தங்ஞ்ன்ப்ஹற்ண்ர்ய்) 1803, சென்னை உயர்நீதிமன்ற அறிக்கைகள் 1862 போன்ற பல அரிய ஆவணங்களும், தரவுகளையும்  உள்ளடக்கியுள்ளது.
  • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையானது, கடந்த 2004-இல் தொடங்கப்பட்டது.
  • சட்ட நிகழ்வுகள், தகவல்களை வெளியிடும் -சட்ட செய்தி இதழ்- (Madras Law Journal) உதயமான இடம் சென்னை உயர்நீதிமன்றம். இது தான் முதன் முதலில் தோன்றிய உயர் நீதிமன்ற சட்ட செய்தி இதழாகும். இது தொடங்கிய ஆண்டு 1891 ஆகும்.
  • ஆங்கிலேயர்களிடமிருந்து, இந்தியா 1947-இல் சுதந்திரமடைந்த பின்னர் பதவியேற்ற 29-ஆவது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவியேற்ற 28-ஆவது இந்தியரும் இந்திரா பானர்ஜியே ஆவார்.
  • சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்னர், 2-ஆவது பெண் நீதிபதி(இந்திரா பானர்ஜி) ஒருவர் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கடந்த 1992-ஆம் ஆண்டு (ஜூன்-நவம்பர்) முதல் பெண் தலைமை நீதிபதியாக கந்த குமாரி பட்நாகர் நியமிக்கப்பட்டார்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்றும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையை தமிழ்நாடு மதுரைக் கிளை என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என, 2016-ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-பா.சேதுராமன்

படம்: ஏ.எஸ். கணேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com