வாழ்வின் ஓரமாக வரும் குரல்

சமீபத்தில் 82-ஆம் பிறந்த நாள் கண்ட பின்னணி பாடகி பி.சுசீலாவை வாழ்த்தி வந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை... 
வாழ்வின் ஓரமாக வரும் குரல்

சமீபத்தில் 82-ஆம் பிறந்த நாள் கண்ட பின்னணி பாடகி பி.சுசீலாவை வாழ்த்தி வந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. இது தொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை... 
"அண்மையில் அம்மையார் பி.சுசீலாவை பற்றி பரவிய வதந்தி கேட்டு துடித்துப் போனேன். 5 நிமிடங்களில் அது உண்மையல்ல என்று தெரிந்து நிம்மதி கொண்டேன். கலைத்துறையில் நான் நேசிக்கும் மிகச் சிறந்த ஆளுமைகளுள் ஒருவர் பி.சுசீலா. என் பள்ளிப் பருவத்தில் இருந்து அவரது தேன் குரல் என் வாழ்வின் ஓரமாக நடந்து வந்துக் கொண்டே இருக்கிறது. சென்னைக்கு வந்ததும் நான் சந்திக்க ஆசைப்பட்ட ஆண்கள் இரண்டு பேர். ஒருவர் கருணாநிதி. இன்னொருவர் எம்.ஜி.ஆர். சந்திக்க ஆசைப்பட்ட ஒரே ஒரு பெண் பி.சுசீலா. ஆனால், என் பாடலை அவர் பாட வந்த போதுதான், சந்திக்க முடிந்தது. பாலு மகேந்திரா இயக்கி வெளிவராத படத்துக்காக பாட வந்தார். பாட்டைச் சொல்லிக் கொடுத்து நான் உங்களின் பல்லாண்டு ரசிகன் என்றேன். சிரித்தார். அந்த சிரிப்பையே சுரம் பிரிக்கலாம் என்பது போல் தோன்றியது. விசும்பல், பரவசம், வலி, தாய்மை, காதல் இவைகளை உணர வைத்தவர் பி.சுசீலா. தமிழை தமிழாக உச்சரிக்க வேண்டுமா? பி.சுசீலா, டி.எம்.எஸ். சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களை கேளுங்கள். புதிய தலைமுறை பாடகர்கள் இவர்களின் பாடல்களை மனப்பாடம் செய்ய வேண்டும். 100 ஆண்டுகள் வாழ்வது கூட கடினம் அல்ல. ஆரோக்கியத்துடன் வாழ்வதுதான் கடிது. உடல்நலத்துடன் வாழ வேண்டும் என வாழ்த்தினேன். குழந்தைபோல் சிரித்தார். வாழ்க பி.சுசீலா'' என்றார் கவிஞர் வைரமுத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com