பியார் பிரேமா காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
பியார் பிரேமா காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடிக்கும் பட அறிவிப்பு வெளியாகிவுள்ளது. படத்தின் பெயர் "பியார் பிரேமா காதல்'.
"பாகுபலி 2' படத்தை வெளியிட்ட கே கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஓய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டு இப்படத்தை இளன் எழுதி இயக்குகிறார். 
இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் ஷங்கர்ராஜா இசையமைக்கிறார். படம் குறித்து இயக்குநர் இளன் கூறுகையில், "உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அனைத்துமே காதலை மையமாக கொண்டு உருவானவை. காதல் எப்போதும் அலுக்காது. அந்தப் படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுக்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த பாணி படமாக இந்த திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதலை ஹிந்தியில் "பியார்' என்றும் தெலுங்கில் "பிரேமா' என்றும் தமிழில் "காதல்' என்றும் சொல்லுகிறோம். அந்த மூன்று வார்த்தைகளையும் இணைத்து இப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார் இளன். படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில், படக்குழு சார்பில் "பியார் பிரேமா காதல்' படத்தின் முதல் பார்வை சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com