ஹாரர் பாணி கதை 

ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இங்கிலிஷ் படம்'. ராம்கி, மீனாட்சி, ஸ்ரீஜா , சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா நடிக்கின்றனர்.
ஹாரர் பாணி கதை 

ஆர் .ஜே.மீடியா  கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "இங்கிலிஷ் படம்'. ராம்கி, மீனாட்சி, ஸ்ரீஜா , சிங்கமுத்து, சிங்கம்புலி, மதுமிதா நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் குமரேஷ் குமார். ஹாலிவுட் பாணி ஹாரர் கதை என்பதால் இப்படத்துக்கு  இங்கிலிஷ் படம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 
ராம்கி வடசென்னை தாதாவாக நடிக்கிறார். கதைப்படி வடசென்னையின் தாதாவான ராம்கி தனது பகுதியில்  ஒரு  வீட்டை ஏமாற்றி அபகரித்து பல கோடிக்கு  விற்பதற்கு முயற்சி செய்கிறார்.  அந்த  வீட்டில் பேய்  இருப்பதாக  பலராலும் நம்பப்பட , அந்த வீட்டை வாங்க வரும் நபர், வீட்டில் பேய் இல்லை என்று நிருபித்தால்  வீட்டை  வாங்கி கொள்வதாக சொல்கிறார். எனவே பேய் இல்லை என்று உறுதி செய்ய  ராம்கி களத்தில் இறங்க, அதில் அவர் சந்திக்கும் அனுபவங்களும், சம்பவங்களும்தான் கதை.  காமெடி கலந்த  ஹாரர் திரில்லராக உருவாக்கி உள்ளோம். இப்படம்  ராம்கியை  வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படமாக அமையும்.  இதுவரை பார்க்காத ராம்கியை திரையில் காண முடியும். படத்தில் நடிகர் சிங்கம் புலி, பேய்களை வாடகைக்கு விடுபவராக வருகிறார். இறுதிக் கட்டப் பணிகள் முடிந்துள்ள நிலையில், வரும் அக்டோபர் 6-ஆம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com