ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் "2.0'. இப்படத்தில் இடம் பெறும் இறுதிப் பாடல் படமாக்கப்படாமல் இருந்து வந்தது. இதோடு சில காட்சிளையும் படமாக்க இயக்குநர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா படப்பிடிப்பில் ரஜினி கவனம் செலுத்தி வருவதால், இதற்காக கால்ஷீட் பெற்று படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் இருந்தது. தொடர்ச்சியாக சில நாள்கள் ரஜினியின் கால்ஷீட்டுக்காக ஷங்கர் காத்திருந்தார். இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி முதல் இதற்கான கால்ஷீட்டை தந்திருந்தார் ரஜினி. சிறு சிறு இடைவெளி விட்டு, இந்தக் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன. இதைத் தொடர்ந்து துபாயில் அக்டோபர் 27-ஆம் தேதி பிரம்மாண்டமாக இசை வெளியீட்டை நடத்த லைகா நிறுவனம் தயாராகி வருகிறது. படக்குழுவினரோடு பல்வேறு திரையுலக பிரபலங்களையும் துபாய்க்கு அழைத்துச் செல்கிறார்கள். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் வரும் ஜனவரியில் திரைக்கு வருகிறது.