கொடுத்து மகிழும் கொண்டாட்டம்!

பிரச்னை என்று ஏற்பட்டால் தேடிச்சென்று உதவி செய்வது மனிதனின் பண்பு. அதை எவ்வளவு பேர் செய்கிறார்கள். ஆனால் வி.ஆர்.கண்ணன் அப்படி அல்ல.
கொடுத்து மகிழும் கொண்டாட்டம்!

பிரச்னை என்று ஏற்பட்டால் தேடிச்சென்று உதவி செய்வது மனிதனின் பண்பு. அதை எவ்வளவு பேர் செய்கிறார்கள். ஆனால் வி.ஆர்.கண்ணன் அப்படி அல்ல. தான் பார்க்கும் நபரிடம் பிரச்னை என்றால் இவர் முடிந்தவரை உதவி செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆனால் இவர் பெரிய கோடீஸ்வரர் அல்ல. எப்படி இவரால் முடிகிறது என்ற கேள்விக்கு அவரே பதில் தருகிறார்.
""என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்த உதவும் மனப்பான்மை என்னிடம் எப்படியோ இணைந்து விட்டது. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே என்னைப்போன்ற சிறுவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். பேனா, பென்சில், ரப்பர் என்று வாங்கித் தருவது என்று ஆரம்பித்து, இன்று நான் சுமார் 250 குழந்தைகளுக்கு புத்தகங்கள் அல்லது அவர்களின் பள்ளிக் கட்டணம் செலுத்தி இருக்கிறேன். 1992 - ஆம் ஆண்டு பாரத் விகாஷ் பரிஷத் (ஆட்ஹழ்ஹற்ட் யண்ந்ஹள் டஹழ்ண்ள்ட்ஹக்) என்ற தேசிய சமூக கலாசார மையத்தில் இணைத்து வேலை செய்ய தொடங்கினேன். என் வேலையை பார்த்து அவர்கள் என்னை பாராட்டினார்கள். இந்த பாராட்டு எனக்கு ரோட்டரி சங்க விருது பெறுவது வரை அழைத்துச் சென்றது என்றால் அது மிகையில்லை. தாய்லாந்து ரோட்டரி சங்கம் எனக்கு இந்த விருதினை வழங்கி கெüரவப்படுத்தியது. இது தந்த ஊக்கம் மேலும் என்னை பொது சேவை செய்ய ஊக்குவித்தது. சென்னைக்கு வந்த நான் 2014 -ஆம் ஆண்டு "தர்ம விகாஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்' (ஈட்ஹழ்ம்ஹ யண்ந்ஹள் இட்ஹழ்ண்ற்ஹக்ஷப்ங் பழ்ன்ள்ற்) என்ற ஒன்றை ஆரம்பித்து என் பணியை செய்யத் தொடங்கினேன். செயற்கை கால் வைத்து உதவுவது, ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கித் தருவது, அவர்கள் படிக்க உதவி செய்வது, ஏழைப் பெண்களுக்கு அவர்களது வாழ்க்கைத் தரம் உயர ஏதாவது ஒரு தொழில் தொடங்கி வைப்பது என்று என்னால் முடிந்தவரை உதவி செய்வது இன்றுவரை சர்வ சகஜமாக நடை பெற்று வருகிறது.
இதற்கெல்லாம் காரணம் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்மணிக்கு இரு பெண் பிள்ளைகள். 12 -ஆவது படிக்கும் அவரது மூத்த மகளுக்கு புத்தகம் மற்றும் பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலை. அவளையும் வீட்டு வேலைக்கு அனுப்பலாம் என்ற நிலையில் விவரம் என் காதுகளுக்கு எட்டியது. நான் அந்த அம்மாவை அழைத்து நான் பணம் தருகிறேன் பெண்ணைப் படிக்க வையுங்கள் என்றேன். இன்று அந்தப் பெண் படித்து நல்ல நிலையில் இருக்கிறார்.
ஒரு முறை வேலூர் அருகே உள்ள ஒரு கோயிலுக்கு சென்று, அங்குள்ள குளத்தில் கை கால் கழுவச் சென்றேன். ஒரு கால் இல்லாத 40 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் கோலுடன் நின்று கொண்டிருந்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவருக்கு செயற்கை கால் கொடுத்து உதவினேன். அவர் ஊன்று கோல் இல்லாமல் நடப்பதை பார்த்து அவருக்கு மட்டும் அல்ல எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு பெண்மணி கைக்குழந்தையுடன் ஒரு காலும் இல்லாமல் வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில் அவருக்கு இதே போன்று காலை பொருத்திய பின் இன்று அவர் நடந்து வந்து வேலையும் செய்து வாழ்க்கையில் முன்னேறியதைப் பார்க்க கண்டிப்பாக எல்லோரும் சந்தோஷப் படுவார்கள். கல்யாணமான நடுத்தர வயதுக்
காரர், சர்க்கரை வியாதி உள்ளவர். குடியும் உண்டு. அதன் விளைவினால் ஒரு விபத்து. ஒரு காலை எடுக்க வேண்டிய சூழல். வேலைக்கு போக முடியாத நிலை. குடும்பமே கவலைப்பட்டது. நான் அவருக்கு செயற்கை கால் பொருத்த முடிவுசெய்து வரவழைத்தேன்.
ஒவ்வொருவருக்கும் இந்த கால் வேறு வேறு விதமாக இருக்கும். முழங்காலுக்கு கீழ் கால் இல்லாமல் இருந்தால், வெறும் கையால் பிடித்துக் கொள்ளும் துணை கொம்பு என்றால் ஒரு விலை. சாதாரணமாக கால்கள் என்றால் ஒரு விலை. நாம் ஷூ போல் அணிந்து கொள்ளும் செயற்கை கால் என்றால் அது கொஞ்சம் விலை அதிகம். ஆனால் அது நாட்பட உழைக்கும். ஆரம்பத்தில் போடும் போது எங்கு கால் துண்டிக்கப் பட்டுள்ளதோ அங்கு வலி இருக்கும். பின்னர் மெல்ல மெல்ல வலி காணாமல் போய்விடும். அதற்கு நாம் சிலமாதங்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். ஆனால் அவருக்கு இது எல்லாம் தெரியாது. செயற்கை கால் பொருத்திய சில நாட்களிலேயே என்னிடம் வந்து இந்த கால் வேண்டாம் என்னால் வலியை தாங்க முடியவில்லை, என்று காலை கழட்டி என் கையில் கொடுத்து விட்டார். நான் அவரிடம் பொறுமையாக விளக்கிச் சொன்ன பிறகு சென்றவர் சமீபத்தில் என்னை சந்திக்க வந்தார். காலில் விழாத குறையாக என்னிடம் மன்னிப்பு கேட்ட அவர், தான் நன்றாக நடப்பதுடன் ஓடவும் முடிகிறது என்று ஓடிக் காண்பித்த போது என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வரும் அக்டோபர் மாதம் முதல் வாரம் "கொடுத்து மகிழும் வாரம்' (ஒர்ஹ் ர்ச் ஞ்ண்ஸ்ண்ய்ஞ் ஜ்ங்ங்ந்) உலகெங்கும் ஆண்டு தோறும் கொண்டாட இருக்கிறார்கள். நான் பத்து பேருக்கு இந்த ஆண்டு ஏதாவது கொடுத்து அவர்களையும் மகிழ வைத்து நாமும் மகிழலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதற்கெல்லாம் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். என் நண்பர்கள் பலர் உதவுகிறார்கள். நம் நாட்டில் இன்னும் மழை பொழிகிறது என்றால் இந்த மாதிரி நல்ல உள்ளங்கள் பல இருக்கின்றன என்று தைரியமாகக் கூறலாம். அத்துடன் எங்கள் டிரஸ்ட் மூலம் கிடைக்கும் பணமும் உதவுகிறது'' என்று கூறுகிறார் கண்ணன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com