வலையில் பிடித்தவை...

தற்போதெல்லாம் அங்கு செல்வது குறைந்துவிட்டது. கிழிந்த பணத்தாள்களை மாற்றுவதற்காக இம்முறை சென்றிருந்தேன். 
வலையில் பிடித்தவை...

ஓராண்டுக்கு முன்பு வரை மாதாமாதம் ரிசர்வ் வங்கி சென்று வருவேன். தற்போதெல்லாம் அங்கு செல்வது குறைந்துவிட்டது. கிழிந்த பணத்தாள்களை மாற்றுவதற்காக இம்முறை சென்றிருந்தேன். 
என் அருகில் ஒரு வயோதிகர். ஏறக்குறைய 6000 ரூபாய்கள் கந்தல் கோலமாக அவரிடம் இருந்தது. பெரிய ஆப்பரேஷன் செய்ததுபோல ஒட்டு போட்டிருந்தார். ஏதோ ஒரு சந்தேகத்தை என்னிடம் கேட்டார். நானும் பதில் சொன்னேன். பிறகு அவராகவே,
"போன வாரம் பெஞ்ச மழையப்ப... வியாபாரம் செய்த பணத்த கடையிலேயே மறந்து வச்சிட்டுப் போயிட்டேன். மொத்தக் காசையும் எலி கடிச்சி போட்டுடுச்சி...'
"அச்சச்சோ... நீங்க எங்கிருந்து வர்றீங்க...?'
"மீஞ்சூர் தம்பி...'
"அவ்வளோ தூரத்துல இருந்தா வறீங்க... கூட யாரையாச்சும் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல...?'
"ஆமா... வந்திருக்கலாம்... எவ்வளோ நேரம் உட்கார்ந்துட்டு இருக்கறது ரொம்பப் பசிக்குது...' என்று விட்டத்தைப் பார்த்தார். என்னுடைய டோக்கன் எண்ணின் முறை வந்தது. 
"ஏங்க நீங்க போயி வாங்கிக்கோங்க...' என்றேன். 
"ஓ... என்னோட நம்பர் வந்துடுச்சா...?'
"இந்தாங்க என் டோக்கன்ல நீங்க வாங்கிக்கோங்க...' என்று அனுப்பி வைத்தேன். 
 நான் கிழிந்த தாள்களை இறுகப் பற்றிக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறேன்.
-கிருஷ்ணபிரபு
தொகுப்பு: சந்திர.பிரவீண்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com