ராமானுஜர் வரைந்த ஓவியம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர் மகான் ராமானுஜர் என்றால் வியப்பாகத்தானே இருக்கும். 
ராமானுஜர் வரைந்த ஓவியம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர் மகான் ராமானுஜர் என்றால் வியப்பாகத்தானே இருக்கும். 

மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், வரவிருக்கும் போரின் முடிவுகள் எப்படி இருக்கும்  என்பதை சஞ்சயனிடம் கேட்டபோது,  "போரே தொடங்காத நிலையில் முடிவுகளைப் பற்றி எப்படி கூற முடிகிறது?' என்ற கேள்விக்கு சஞ்சயன் "தெய்வீகப் பார்வையால் இந்த உலகத்தைப் பார்க்கவேண்டும்' என்கிறான். "அது எப்படி?' என்று திருதராஷ்டிரன் கேட்கிறான்.  

"ஒரு மனிதன் கண்ணாடியில் தன் உருவத்தைக் காண்பதுபோன்று, நிலவின் ஒளியில் இந்த பூமியின் உருவம் தெரிகிறது.  ஒரு பக்கம் இரண்டு முயல்கள் மற்றும் ஓர் அரச இலை உள்ளது. அடுத்த பக்கம் இரண்டு அரச இலைகள் தெரிகின்றன'.  என்கிறான். 

மகாபாரதத்தில் வேத வியாசர் விவரித்துள்ள இந்த ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வரைபடத்தை ராமானுஜர் வரைந்து காட்டினார். அந்த வரைபடம்தான் இது. இதை நேராகப் பார்த்தால் முயலும், இலைகளும் தெரியும். தலைகீழாகத் திருப்பிப் பார்த்தால் உலக வரைபடம் தெரியும். அமெரிக்கா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பாகவே உலகின் மறுபக்கத்தை வரைபடத்தில் வரைந்து காட்டியுள்ளார் என்றால் ராமானுஜரின் தெய்வீகப் பார்வையை என்னவென்று சொல்வது? 
-எம்.சி.ராஜேந்திரன் (வாட்ஸ் ஆப்}லிருந்து)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com