360 டிகிரி

"நீண்ட மோதிர விரல்' கொண்ட ஆண்களுக்கு, மாரடைப்பு எளிதில் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* தமிழ்நாடு வருவாய்த் துறை "பசலி' ஆண்டு முறையைத்தான் பின்பற்றுகிறது. பசலி ஆண்டு முறை, முகலாய மன்னர் ஷாஜஹானின் ஆட்சியில் கி.பி. 1636-இலிருந்து வழக்கத்துக்கு வந்தது. ஆனால் முதல் பசலி ஆண்டு 1046 என்றுதான் கணக்கிடப்பட்டது. அப்போது ஹிஜிரா ஆண்டு 1046. அதை ஒட்டியே பசலி ஆண்டும் கணக்கிடப்படுகிறது. கிறிஸ்துவ ஆண்டிலிருந்து 590-ஐக் கழித்தால் பசலி ஆண்டு கிடைக்கும்.
- நெ.இராமன்

* "நீண்ட மோதிர விரல்' கொண்ட ஆண்களுக்கு, மாரடைப்பு எளிதில் ஏற்படுவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவதுதான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

* காதலுக்கும், இதயத்துக்கும் நேரடி தொடர்பு கிடையாது. அது மூளை, நினைவு, மனம் தொடர்புடையது.

* ஆண்களை விட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும்.
- சரஸ்வதி பஞ்சு
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com