"மனம்' பாணியில் தமிழில் சினிமா 

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகிய மூன்று தலைமுறையையும் இணைத்து வெளியான படம்
"மனம்' பாணியில் தமிழில் சினிமா 

தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகிய மூன்று தலைமுறையையும் இணைத்து வெளியான படம் "மனம்'. தாத்தா, மகன், பேரன் என மூவரையும் இணைத்து உருவான இப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இது போன்ற முயற்சியாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கதை எழுதியுள்ளார் இயக்குநர் கே.ஜி.எஸ்.செந்தில்குமார். சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்குமான திரைக்கதை முடிந்துள்ள நிலையில், அவர்களை அணுகி கதை சொல்ல தயாராக இருக்கிறார். இதுகுறித்து அவர் பேசும் போது:
 "என் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான "விழி மூடி யோசித்தால்' ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டது. இதையடுத்து இரண்டு கதைகள் எழுதியுள்ளேன். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் ஒரு கதை உள்ளது. இந்தக் கதையில் விஷால் நடிப்பார் என எதிர்பார்க்கிறேன். ப்ரீயட் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இன்னொன்று கதை தயாராக உள்ளது. இந்தக் கதையில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இருந்தால்தான் எடுக்க முடியும். இதற்கான தலைப்பு மற்றும் ஒரு பாடலும் தயாராக உள்ளது. கதை சொல்லுவது தொடர்பான வேலைகள் நடக்கின்றன. இந்த நிலையில் பெண்மையையும், தாய்மையையும் போற்றும் விதமாக ஒரு பாடலை உருவாக்கி அதை ஆல்பமாக இணைய தளங்களில் வெளியிட்டுள்ளேன். அடுத்து நடிப்பதற்கான பணிகளிலும் இறங்கியுள்ளேன். என் தோற்றத்தை பார்த்து விட்டு மிஷ்கின் "துப்பறிவாளன் 2' படத்தில் நடிப்பது பற்றி பேசினார். நல்ல விஷயம் நடந்தால் மகிழ்ச்சி'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com