மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் 

எப்போதுமே சவால் நிறைந்த வேடங்களில் நடிப்பது அனுபம் கெரின் வழக்கம். "குற்றப்பத்திரிகை' படத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி வேடம் ஏற்று நடித்தார்.
மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கெர் 

எப்போதுமே சவால் நிறைந்த வேடங்களில் நடிப்பது அனுபம் கெரின் வழக்கம். "குற்றப்பத்திரிகை' படத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி வேடம் ஏற்று நடித்தார். தமிழில் "விஐபி', "லிட்டில் ஜான்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது மற்றொரு பிரதான வேடம் ஏற்று நடிக்க உள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை, "தி ஆக்சிடென்ட்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
 சஞ்சய் பாரு எழுதியுள்ள புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. இதில் மன்மோகன் சிங் வேடம் ஏற்று நடிக்கிறார் அனுபம் கெர். இப்படத்தை விஜய் கட்டே இயக்குகிறார். மன்மோகன் சிங் வாழ்க்கை கதையாக உருவாகும் இப்படம் அவரது கல்லூரி பருவம், அரசியல் பிரவேசம், எதிர்பாராத வகையில் பிரதமர் பதவி ஏற்றது, பொருளாதார சித்தாந்தங்கள் போன்ற அம்சங்களுடன் சித்திரிக்கப்படுகிறது. மன்மோகன் சிங் வேடம் அணிந்த புகைப்படத்தை அனுபம் கெர் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டார். அதில், ""டாக்டர் மன்மோகன் சிங் வேடம் ஏற்று நடிப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com