360 டிகிரி 

இந்தியாவின் தேசிய கீதமான "ஜனகனமன' பாடலை 52 விநாடிகள் உச்சரிக்க வேண்டும். இப்பாடலில் மொத்தம் 13 வரிகள் உள்ளன.

தேசிய கீதம்
• இந்தியாவின் தேசிய கீதமான "ஜனகனமன' பாடலை 52 விநாடிகள் உச்சரிக்க வேண்டும். இப்பாடலில் மொத்தம் 13 வரிகள் உள்ளன.
- கே.கஸ்தூரி, காட்பாடி.

• ரோஜாவில் இருந்து பன்னீர் எடுத்து அதன் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா? ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான்.
- அமுதா அசோக்ராஜா

• "கேட்வே ஆஃப் இண்டியா' என்ற இடம் மும்பையில் உள்ளது. 1911-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவிற்கு வந்ததை நினைவூட்டும் வகையில் கட்டப்பட்டது. "இந்தியா கேட்' என்பது தில்லியில் உள்ளது. பல்வேறு யுத்தங்களில் உயிர் துறந்த தியாகிகளின் (சுமார் 90,000 வீரர்கள்) நினைவாகக் கட்டப்பட்டது.
- எம்.அசோக்ராஜா

முதல் விமானக் கடத்தல்
• கடந்த 1948-ஆம் ஆண்டு மெக்காவிலிருந்து ஹாங்காங்கிற்குப் பறந்து கொண்டிருந்த ஒரு விமானத்தை சீனாவைச் சேர்ந்த நான்கு பேர் கடத்திக்கொண்டு போனார்கள். அதுதான் உலகில் முதன்முதலில் நடந்த ஹைஜாக் விமானக் கடத்தல்.

கோட்டு பட்டன்கள்
• சீன மக்கள் பொதுவாக தங்கள் கோட்டுகளில் ஐந்து பட்டன்கள் இருக்குமாறு தைத்துக்கொள்கிறார்கள். கி.மு.500-இல் வாழ்ந்த சீன தத்துவஞானி கன்ஃபூசியஸ் கூறிய ஐந்து தத்துவக் கோட்பாடுகளை நினைவில் நிறுத்தவே இன்றும் இந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
- ஆர்.ராதிகா

• மத்திய கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் தான் முதன்முதலில் பசுமாடுகள் வளர்ப்புப் பிராணிகளாக்கப்பட்டன. பசுக்களுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது. அதனால் அவை குளிர்ச்சியான இடங்களிலேயே வாழ விரும்பும். பசுக்களால் தினமும் நாலரை காலன் தண்ணீர் குடிக்க முடியும்.
- கே.பிரபாவதி

பெண்ணின் வேறு பெயர்கள் சில
• அணங்கு, அங்கணை, அரிவை, ஆடழள், ஆட்டி, இளம்பிடி, இணையாள், காந்தை, காரிகை, கார்குழலி, கோதை, கயல்விழியாள், சிறுமி, சுந்தரி, சீராள், தளிரியள், தாமரைக்கண்ணாள், தெரிவை, தையல், நங்கை, நேரிழை, நல்லாள், நாரி, துண்ணிடையாள், பாவை, பிணா, பிரியை, பூவை, பெண்டு, பெதும்பை, பேதை, மதங்கி, மதியாள், மதிமுகி, மகடூஉ, மகள், மங்கை, மடந்தை, மடவரல், மடவோள், மாது, மாயோள், மானினி, மின்னி, வஞ்சனி, வஞ்சி, வனிதை, விறலி, யுவதி. இவை பெண்ணின் வேறு பெயர்கள்.
- உ.இராமநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com