அனுஷ்கா சர்மா விளம்பர பிரச்சாரம்!

வருண் தவான், அனுஷ்கா சர்மா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் படம் "சுய் தாகா- மேட் இன் இந்தியா'. இந்தப் படத்தில் வருண் தவான் தையல் கடை வைத்திருப்பவராகவும்,
அனுஷ்கா சர்மா விளம்பர பிரச்சாரம்!

வருண் தவான், அனுஷ்கா சர்மா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி வரும் படம் "சுய் தாகா- மேட் இன் இந்தியா'. இந்தப் படத்தில் வருண் தவான் தையல் கடை வைத்திருப்பவராகவும், அனுஷ்கா சர்மா தையல் வேலைப்பாடு செய்பவராகவும் நடிக்கின்றனர். பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்துக்காக விளம்பர பிரச்சாரம் என்ற புது வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களின் வாழ்வியலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை, இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த வியூகம் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் இந்தப் படத்துக்கான இந்த பிரச்சாரம் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் என்பதால், அன்ரு முதல் இந்த விளம்பர பிரச்சாரத்தை தொடங்குகிறேன் என்று படத்தின் தயாரிப்பாளர் மணீஷ் ஷர்மா தெரிவித்துள்ளார் . இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாட மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நாளில் 1905-ஆம் ஆண்டில் சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் உள்நாட்டு தொழில்முயற்சியை புதுப்பிப்பதைக் கண்டது. வருண் தவான், அனுஷ்கா சர்மா இருவரும் இந்தியா முழுமையும் இதற்காக சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளனர். செப்டம்பர் 28-ஆம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com