கவ்பாய் வேடத்தில் பிரியங்கா சோப்ரா

சில ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் சீரியலில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபலம் ஆனார்.
கவ்பாய் வேடத்தில் பிரியங்கா சோப்ரா

சில ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் சீரியலில் நடிக்க சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு பிரபலம் ஆனார். அதையடுத்து ஓரிரு ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தார். இந்நிலையில் ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோன்ஸுடன் நெருங்கி பழகி வருகிறார் பிரியங்கா. இருவரும் விரைவில் திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் ஹாலிவுட்டில் பெரிய பட வாய்ப்பு பிரியங்காவுக்கு வந்துள்ளது. "கேம்ஸ் ஆஃப் தேரான்ஸ்' படத்தை இயக்கிய மைக்கேல் மெக்லேரன் இயக்கும் "கவ்பாய் நிஞ்ச விகிங்' படத்தில் கதாநாயகியாக பிரியங்கா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் கிரிஸ் பிராட் ஹீரோ. அடுத்த ஆண்டு ஜூன் 28-ஆம் தேதி படம் வெளியிடப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com