360 டிகிரி

ஜப்பானியர்கள் தீப்பெட்டிகளை ஜப்பானில் விலை கொடுத்து வாங்குவதில்லை. ஜப்பானில் துண்டுப் பிரசுரங்கட்குப் பதிலாகத் தீப்பெட்டிகளைக் கொடுக்கின்றனர்.
360 டிகிரி

தீப்பெட்டி இலவசம்!

ஜப்பானியர்கள் தீப்பெட்டிகளை ஜப்பானில் விலை கொடுத்து வாங்குவதில்லை. ஜப்பானில் துண்டுப் பிரசுரங்கட்குப் பதிலாகத் தீப்பெட்டிகளைக் கொடுக்கின்றனர். தீப்பெட்டிகளில் மேலே ஒட்டியுள்ள காகிதங்களில் விளம்பரங்கள் காணப்படும். ஹோட்டல் மற்றும் கடைகளில் தீப்பெட்டிகளை இலவசமாக வழங்குவது வழக்கம். 

"அங்கும் இங்கும்' என்ற நூலிலிருந்து.

வைப்புழி!


வங்கியிலுள்ள லாக்கர்களைப் பெட்டகம் என்று இப்பொழுது சொல்லுகிறோம். ஆனால், சங்க காலத்திலேயே அதற்கு, "வைப்புழி' என்ற சொல் வழங்கப்பட்டு வந்தது. திருக்குறள், நாலடியார்  ஆகிய நூல்களில் "வைப்புழி' என்ற இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது.


பர்லாங்!

ஒருவர் அதிகபட்சமாக ஒரு சமயத்தில்  உழக்கூடிய தூரத்தை "பர்ரேலாங்' என்று அழைத்தனர். அதுவே மருவி, "பர்லாங்' ஆயிற்று. ஒரு பர்லாங் என்பது உத்தேசமாக 201 மீட்டருக்குச் சமம். தற்போது குதிரை பந்தயங்களில் மட்டுமே, "பர்லாங்' அளவு முறை பயன்படுத்தப்படுகிறது.

-நெ.இராமன்


தெரியுமா?


ஜெர்மன் மற்றும் ஜப்பான் நாட்டில் ரயிலில் பயணித்து வேலைக்கு செல்கிறீர்கள். ரயில் தாமதமாக சென்று உரிய இடத்தை அடைகிறது என்றால், "தாமதம் உண்மைதான்' என இரு நாட்டு ரயில்வேயும், தாமத சான்றிதழ் வழங்கும். 

கல்லூரி படிப்பு இன்று பல நாடுகளில் மிக விலை உயர்ந்த நிலையை எட்டி வரும்போது பிரான்ஸ் ஜெர்மனி, டென்மார்க், ஸ்வீடன் நாடுகளில், பல்கலைப் படிப்புகளுக்கு மாணவ மாணவியருக்கு ஆகும் செலவை, அரசு திரும்பக் கொடுத்து விடும்.

-ராஜி

109 வயது பாட்டி

கர்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் உள்ளது யகுண்டி கிராமம். இங்கு வசிக்கும் சாவித்திரி அஜிக்கு அண்மையில் 109-வது பிறந்த நாள், கிராமம் அறிய கொண்டாடப்பட்டது. கிராம மக்கள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.

"சாவித்திரி அஜி' உண்மையில் சாயவ்வா சித்தப்பா டம்பாகே. இவருக்கு 4 மகன்கள், 3 மகள்கள். இன்று குடும்பம் விரிவடைந்து 91 பேர் கொண்ட ஆலமரமாக பரவியுள்ளது. கொள்ளுப் பேரன் தங்க இலைளைக் கொண்டு அபிஷேகம் செய்ய பாட்டி  மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தார்.இந்த வயதிலும் சகஜமாய் நடமாடும் இந்தப் பாட்டி,  தன் காரியங்களை தானே செய்து கொள்வாராம். உங்கள் மனதை நெகிழ வைத்த நிகழ்வு எது என கேட்ட போது, ""முதல் தடவையாக என் வாரிசுகள் 91 பேரும் என்னை சுற்றி நின்று கலகலப்பூட்டியது மிகவும் மகிழ்ச்சியான தருணம்,'' என்றார் சாவித்திரி அஜி!

-ராஜேஸ்வரி ராதா கிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com