சங்கீத அவதார புருஷர்களும் நம் "செக்யூலர்' வித்வான்களும்!

பாரத பூமி புண்ணிய பூமி. காலம் காலமாக, ஏராளமான மகான்கள் இப்புனித பூமியில் அவதரித்து, மக்களின் நல்வாழ்க்கைக்காக, "பக்தி' மார்க்கத்தை உபதேசித்தருளினர்.
சங்கீத அவதார புருஷர்களும் நம் "செக்யூலர்' வித்வான்களும்!

பாரத பூமி புண்ணிய பூமி. காலம் காலமாக, ஏராளமான மகான்கள் இப்புனித பூமியில் அவதரித்து, மக்களின் நல்வாழ்க்கைக்காக, "பக்தி' மார்க்கத்தை உபதேசித்தருளினர்.
கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முதற் பாதியிலும், அக்னியின் மத்தியில் ஒற்றைக் காலில் நின்று, கடும் தவம் புரிந்தும் காண இயலாத பகவானைக் கலியுகத்தில் பக்தி நிறைந்த பாடல்களால் (திவ்ய நாம சங்கீர்த்தனம்) எளிதில் அடைந்து விட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியருளினர் அந்த அவதார புருஷர்கள்!
இத்தகைய மகாபுருஷர்களில், சங்கீத மும்மணிகள் என இன்றும் பூஜிக்கப்படும் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்ரீஸ்யாமா சாஸ்திரிகள் மற்றும் ஸ்ரீபுரந்தரதாஸர் (கன்னடம்) ஸ்ரீ கனகதாஸர் (கன்னடம்), திருவிசைநல்லூர் ஸ்ரீதரஅய்யாவாள் ஆகியோரைச் சொல்லலாம்.
வட இந்தியாவில், ஸ்ரீ  பக்த மீரா, பிறவிக்குருடரான ஸ்ரீசூர்தாஸர், மகாராஷ்டிரத்தில் ஸ்ரீபக்தநாமதேவர், ஸ்ரீதுகாராம்மகராஜ் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இந்த மகான்கள் எவரும், மேடை அமைத்து, பக்கவாத்தியங்களுடன் சங்கீத கச்சேரி செய்யவில்லை, பணத்திற்காகவும் பாடவில்லை!
பகவானின் திவ்ய ùஸளந்தர்யத்தையும் (அழுகு-லாவண்யம்) அவனது லீலைகளையும் பாடி, ஆடி, ஆனந்தத்தில் திளைத்து, பரமானந்தம் என்ற நிலையைத் தொட்டு, இறுதியில் பரவசம் (ECSTACY) என்ற உணர்ச்சியின் உச்சகட்டத்தை அடையும்போது, இறைவனுடன் மானஸீகமாக (மனதால்) ஒன்றிணைந்து, பகவானின் அம்சமாகவே மாறிவிடுகின்றனர், இந்த தாஸ  ஸ்ரேஷ்டர்கள்!
அந்நிலையில் தான், அவர்களது திருவாக்கிலிருந்து அரிய சாகித்யங்கள் வெளிப்படுகின்றன. இத்தகைய  பாடல்கள் அளவற்ற தெய்வீக சக்தி வாய்ந்தவை.
ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதரின் நவகிரக கீர்த்தனைகள் அனைத்தும் பரிகாரசக்தி வாய்ந்தவை.
ஸ்ரீராமபிரானின் படத்தில் கூட ஸ்ரீ ராமனைத் தத்ரூபமாகக் கண்டவர் ஸ்ரீ தியாக ராஜஸ்வாமிகள்  (உதாரணம்: மோஜன ராககீர்த்தனை ""நனுபாலிம்ப்ப நடத்தி வச்சிந்தியோ...'')
பரம ஸ்ரீராமபக்தரான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் கீர்த்தனைகளில் பெரும்பாலானவை அவர் தினமும், "உஞ்ச வ்ருத்தி'க்கு வீதிகளில் செல்லும் போது பாடியவை. மற்றவை, "ஸ்ரீராம பஞ்சாயதன்' எனப்பபடும் ஸ்ரீஸீதாராம பிரபுவை ஆராதிக்கும் போது பாடியவையாகும்.
எத்தகைய பிரதிபலனையும் எதிர்பாராது, "பக்தி' ஒன்றை மட்டுமே உள்ளத்தில் வைத்து பாடப் பெற்றவை கர்நாடக சங்கீத சாகித்யங்கள்.

இன்றைய கர்நாடக சங்கீத வித்வான்கள்!

இவ்விதம், இப்பாரத புண்ணிய பூமியின் அவதார புருஷர்கள் இயற்றிய பாடல்களைக் கற்றுக் கொண்ட இன்றைய வித்வான்களில் பெரும்பான்மையோர் பணத்திற்காகவே கச்சேரி செய்கிறார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஏராளமான, "சங்கீத சபாக்கள்', பல பெயர்களில் உருவாகி, மார்கழி மாதத்தில், சங்கீத திருவிழாவே நடைபெறுகிறது சென்னையில். பல வெளியூர்களிலும், மார்கழி மாதத்தில் சங்கீத கச்சேரிகள் நடைபெறுகின்றன. இவை அனைத்தும் COMMERCIALSATION அதாவது வியாபார நோக்கத்துடன் தான் நடைபெறுகின்றன. "பக்தி'க்கு இடம் குறைந்து, ENTERTAINMENT என்பது போல் ஆகிவிட்டன இத்தகைய சங்கீத கச்சேரிகள்!!

போதாக்குறைக்கு, சபா நிகழ்ச்சிகள் நடைபெறும் இடத்தில், போட்டி போட்டுக் கொண்டு சிற்றுண்டி விடுதிகளும் செயல்படுகின்றன. இவ்விதம் சில குறைகள் இருப்பினும் இன்றைய சூழ்நிலையில் கர்நாடக சங்கீதம் இப்படியாவது காப்பாற்றப்படுகின்றதே என்ற திருப்தி மக்களுக்கு!

செக்யூலர் கர்நாடக சங்கீத மேதைகள்!

இந்நிலையில்தான், பிரபல சங்கீத வித்வான்களில் சிலர் திடீரென்று, ஸ்ரீதியாகராஸ்வாமிகள் போன்ற அவதார புருஷர்களின் சாகித்யங்கள் அனைத்து மதத்தினருக்கும் உரியவை என்றும், அதற்காக, உண்மையான கீர்த்தனங்களை அதற்கு ஏற்ப மாற்றியும், பாட ஆரம்பித்துள்ளனர். அதனை நியாயப்படுத்தியும் பேசி வருகின்றனர்.

மேலும், அத்தெய்வீகப் பாடல்கள் ஹிந்துக்களின் சொத்து அல்ல, அனைத்து மதத்தினருக்கும் சொந்தமாகும். அதற்கு ஏற்றபடி, அந்த பாடல்களை மாற்றப்படுவதில் தவறு அல்ல என்றும் கூறி வருகின்றனர்.
பிறமத பெரியோர்கள் எவராவது அவர்கள் வழிபடும் தெய்வத்தின் பெயரால் பாடல்கள் இயற்றி இருப்பின், அவற்றை, அப்படியே நம் கர்நாடக வித்வான்கள் அவர்களது சபையிலோ அல்லது கச்சேரிகளிலோ அல்லது விழாக்களிலோ, பாடுவதில் எவ்வித ஆட்சேபணையும் கிடையாது.
ஆனால், ஸ்ரீராமபிரான், ஸ்ரீகண்ணன், ஸ்ரீ சிவபெருமான், அம்பிகை, ஸ்ரீமகாலஷ்மி மீது பரம பக்தியுடன் மகான்கள் பாடியுள்ளவற்றை மாற்றுவதற்கோ அல்லது திரித்துப்பாடுவதற்கோ, தற்கால வித்வான்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது.
மகான்களின் சாகித்யங்களைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் இவ்வித்வான்களுக்கு நன்றியில்லாவிட்டாலும், மனசாட்சியாவது இருக்கலாம் அல்லவா? 

சென்ற ஆண்டில் தமிழகத்தின் பிரமுகர் ஒருவர் வீட்டு திருமணத்தின் போது, வரவேற்பு தினத்தில், தமிழகத்தின் பிரபல கர்நாடக பாடகி ஒருவர் பெற்ற சன்மானம் ரூபாய் 10 லட்சம்! (அப்போது, நானும் அங்கிருந்தேன்) இதில் வேதனைக்குரிய அம்சம் என்ன வென்றால், அந்த கச்சேரியில் தான், சற்று நேரத்திற்கு முன், "ஸ்ரீ தியாக ராஜரின் நிதிசால சுகமா...  அல்லது ஸ்ரீ ராமபிரானின் சன் நிதிசால சுகமா...?'  என்ற கல்யாணி ராக கீர்த்தனையைப் பாடியிருந்தார் அந்த பாடகி.

கடுமையான வறுமையில் வாடிய நிலையிலும், தஞ்சை சரபோஜி மன்னர் அனுப்பியிருந்த பொற்காசுகளையும் இதர விலையுர்ந்த வெகுமதிகளையும், ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் புறக்கணித்துப் பாடிய கீர்த்தனை இது.

ஏற்கெனவே, ஹிந்து கோயில்களில்  ஆகம, சாஸ்திர விதிகளின்படி, மந்திர பிரதிஷ்டை செய்யப் பெற்ற துவஜஸ் தம்பங்களை அவர்களது வழி பாட்டுத் தலங்களில் நிர்மாணித்து வருகின்றனர், கிருஸ்துவ மதபோதகர்கள்.
திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம், வள்ளலாரின் பாடல்கள் ஆகியவற்றை முதன் முதலில் திரித்து, எழுதியது  ஃபாதர் விவிலியன் மற்றும் மன்னார்குடியில் கிறிஸ்துவ பள்ளி ஒன்றை ஆரம்பித்த ஃபாதர் பின்லேயும் ஆவார்கள்.

திருமங்கை மன்னன் பாசுரத்தில் உள்ள, ""நாராயணா எனும் நாமம்... என்றிருப்பதை, ஏசு எனும் நாமம்...'' என்றும் நாவுக்கரசரின் பாடலில், ""ஈசன் எந்தை இணையடி நிழலே...'' என இருப்பதை மாற்றி... ""ஏசு எந்தை இணையடி நிழலே...'' என எழுதியதும் அந்த  ஃபாதர்பின்லேதான்,  அக்காலத்தில் அந்த நூல் பல எதிர்ப்பை சந்தித்தது.

அமெரிக்க ஜனாதிபதி கூறியது!

உலகம் போற்றும் பேரறிஞரும், சிந்தனையாளருக்கு, உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்க நாட்டின் மூன்றாவது ஜனாதிபதியாகத் திகழ்ந்தவருமான தாமஸ் ஜெஃபர்ஸன்(PRESIDENT THOMAS JEFFERSON) அம்மதத்தினரைப் பற்றி கூறியுள்ளதை, அவரது வார்த்தைகளிலேயே கீழே கொடுத்திருக்கிறேன்.

MILLIONS OF INNOCENT MEN, WOMEN AND CHILDREN, SINCE THE INTRODUCTION OF CHRISTIANITY HAVE BEEN BURNT, TORTURED, FINED, IMPRISONED. YET, WE HAVE NOT ADVANCED ONE INCH TOWARDS UNIFORMITY. WHAT HAS BEEN THE EFFECT OF COERSION? TO MAKE ONE HALF OF THE WORLD FOOLS AND THE OTHER HALF HYPOCRITES? TO SUPPORT  ROGUERY AND ERROR ALL OVER THE EARTH...?

(ஆதாரம்: THOMAS JEFFERSON'S NOTE ON VIRGINIA)

ஹிந்து சமுதாயத்தின் ஒவ்வொரு தெய்வீக அம்சத்தையும், பிரசாரம் மூலம் தங்கள் உடமையாகச் செய்து கொள்ளும் முயற்சியில், தற்போது, நமது கர்நாடக சங்கீதத்தின் மீதும் கை வைக்கத் துணிந்தவர்களுக்கு மக்களின் மரியாதையையும், அன்பையும் பெற்றுள்ள நம் கர்நாடக சங்கீத வித்வான்கள் துணைபோவது நம் துரதிர்ஷ்டம் மட்டுமல்ல, பாரத புண்ணிய பூமியின் மகான்களுக்கு இப்பாடகர்கள் இழைக்கும் துரோகமும் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com