மூவண்ண கொடியின் திறன்!

இந்திய தேசியக் கொடியின் பெருமை மூன்று வண்ணங்கள். இதேபோன்று மூன்று வண்ணங்களை கொண்ட சில நாடுகள்:
மூவண்ண கொடியின் திறன்!

இந்திய தேசியக் கொடியின் பெருமை மூன்று வண்ணங்கள். இதேபோன்று மூன்று வண்ணங்களை கொண்ட சில நாடுகள்:

1. நெதர்லாந்து

இந்தியா போன்ற வண்ணங்களை படுக்கை வசத்தில் கொண்ட நாடு. 1937-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் இந்த கொடி ஏற்கப்பட்டது. ஆரஞ்சு, வெள்ளை மற்றும் நீலம் முதலில் நடைமுறையில் இருந்தது. ஆனால், ஆரஞ்சு வண்ணத்தில் வெயில் பட்டு சிவப்பானது. இதனால் ஆரஞ்சு பதில் சிவப்பே முதல் வண்ணமாக மாற்றப்பட்டது! 

2. அயர்லாந்து

பிரான்ஸ் நாட்டின் மூன்று வண்ண அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொடி... மூன்றும் மதம் சார்ந்தவை. பச்சை கத்தோலிக்க மதம், ஆரஞ்சு ப்ராடெஸ்டண்ட் மதம்... இரண்டையும் இணைத்து செயல்பட நடுவில் வெள்ளை (சமாதானமாய்)

3. பிரான்ஸ்

நாட்டின் தேசிய வண்ணங்கள் சிவப்பு வெள்ளை மற்றும் நீலம்... இவை விடுதலை... சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை குறிப்பவை. இவைதான் பிரான்ஸ் புரட்சியின் கொள்கையாக இருந்தது. நீலமும், சிவப்பும்  பாரீஸ் நகரத்தின் வண்ணங்கள். வெள்ளை போர்பான் ராயல் வீட்டின் வண்ணமாகும். மேற்குறிப்பிட்ட நான்கு நாடுகளுமே தங்கள் கொடியில் வண்ணங்களை செங்குத்தாக அமைத்துள்ளன.

4 .இத்தாலி

நெப்போலியன் உருவாக்கிய கொடியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மூன்று வண்ணங்களுமே (பச்சை-வெள்ளை-சிவப்பு) இத்தாலியின் தேசிய வண்ணங்கள்.

5.பெல்ஜியம்

இதுவும் பிரான்ஸ் நாட்டின் மூன்று வண்ண கொடி அமைப்பில் உருவானது. கருப்பு/தங்க வண்ணம்/ சிவப்பு. இதில் கருப்பு கேடயம்; தங்க வண்ணம் சிங்கம்; சிவப்பு வளைநகம் மற்றும் நாக்கு ஆகியவற்றை குறிப்பதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com