ஸ்பைடர் மேன் அடுத்த பாகம் 

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில், மிகப் பிரபலமான
ஸ்பைடர் மேன் அடுத்த பாகம் 

ஸ்டான் லீ மற்றும் ஸ்டீவ் டிட்கோ ஆகிய இருவரும் இணைந்து உருவாக்கிய கற்பனைக் கதாபாத்திரமான ஸ்பைடர்-மேன், நகைச்சுவைப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலுமே உலக அளவில், மிகப் பிரபலமான ஒரு சூப்பர் ஹீரோ.  2002-இல்  "ஸ்பைடர்-மேன்', 2004-இல் "ஸ்பைடர்-மேன் -2', 2012-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன்', 2014-இல் "தி அமேஸிங் ஸ்பைடர்-மேன் 2' மற்றும் 2017-இல் "ஸ்பைடர்-மேன்: ஹோம் கமிங்' என இதுவரை  5 படங்கள் வெளிவந்துள்ளன.  ஸ்பைடர்-மேனை, அனிமேஷன் அவதாரத்தில் தோற்றுவிக்கும் எண்ணம், 2014-இல் தொடங்கி 2015-இல் உறுதி செய்யப்பட்டது.

ஏறக்குறைய 140 அனிமேஷன் வல்லுநர்கள் இதன் உருவாக்கத்தில் ஈடுபட்டனர். சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. விஷன்ஸ் அகாதெமியில் புதியதாகச் சேர்ந்த மைல்ஸ் மெரேல்ஸ் (ஷமெய்க் மேர்) ஒரு துறுதுறுப்பான மாணவனாகிய போதிலும், புதிய பயிலகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் கூட  தன் நிலையை உறுதிப்படுத்த பரிதவிக்கின்றான். தனது மாமாவான ஆரோன் டேவிúஸாடு (மஹிர்ஷாலா அலி), நியூயார்க் நகர உலா வரும் போது, விஞ்ஞான ரீதியில் உருவாக்கப்பட்ட  ஒரு சிலந்தி (ஸ்பைடர்) மைல்ûஸக் கடித்துவிடுகிறது. அதன் விளைவாகப் பயிலகத்தில் அவர் புதிய சக்திகளோடு பவனி வர, பிரச்னைகள் அதிகரிக்கின்றன. வில்லன் கிங்பின் (லைவ் ஸ்கிரீபர்) மேற்கொள்ளும் சில நாசவேலைகளை நிர்மூலமாக்க வேண்டிய பொறுப்பும் மைல்ஸின் தோள்களில் வந்து விழுகிறது.  அவ்வளவு எளிதான பணியா அது? இதர துருவங்களிலிருந்து வரும் மற்ற ஸ்பைடர்- மேன்களுடனும் மைல்ஸ் இணைந்து செயல்பட வேண்டிய ஒரு நிலை. ஸ்பைடர்-மேனால் பணியை வெற்றிகரமாகச் செயலாக்க இயன்றதா என்பதுதான் கதை.  இசை டேனியல் பெம்பர்டன்.  படத்தொகுப்பு ராபர்ட் ஃபிதர் ஜூனியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com