காமராஜரின் கணிப்பு

இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நிர்மாணிக்க செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. தமிழகத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்று
காமராஜரின் கணிப்பு

இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நிர்மாணிக்க செக் நாட்டு நிறுவனம் முன்வந்தது. தமிழகத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் போராடி அனுமதி வாங்கினார், அப்போதைய முதல்வர் காமராஜர். மத்திய அரசு அதிகாரிகளும், செக் நாட்டு தொழில்முனைவோரும் இணைந்து தமிழகத்தில் பொருத்தமான இடம் தேடி வந்தனர்.
 பரந்தவெளி, தூய்மையான நீர், தேவையான மின்சக்தி, போக்குவரத்து வசதி, இத்தனையும் கூடிய ஓர் இடத்தை நமது அதிகாரிகளால் காட்ட முடியவில்லை. சோர்ந்து போன அவர்கள், தமிழகத்தில் தகுந்த இடமில்லை என்று முடிவெடுத்து வேறு மாநிலத்துக்கு கிளம்பத் தயாராகினர்.
 இதைக் கேள்விப்பட்ட காமராஜர் அவர்களை அழைத்து, அவர்கள் சென்று வந்த இடங்களைப் பற்றி விசாரித்தார். அதிகாரிகள் தாங்கள் சென்று வந்த இடங்களைப் பற்றியும், அதன் குறைகளையும் தெரிவித்தனர்.
 தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்த காமராஜர், "காவிரி ஆற்றங்கரையில் திருவெறும்பூர் என்ற இடம் இருக்கிறதே! அந்த இடத்தைக் காட்டினீர்களா?' என்று கேட்டார். அதிகாரிகள் "இல்லை' என்று தலையசைத்தனர். ""ஏன்...? இவங்க கேட்கிற எல்லா வசதிகளும் அங்கே இருக்கே! போய் முதல்ல அந்த இடத்தைக் காட்டிட்டு வாங்க' என்றார். என்னே ஆச்சரியம். செக் நாட்டு வல்லுநர்களுக்கு அந்த இடம் எல்லா வகையிலும் பொருந்தமானதாகத் தெரிந்தது. அங்கு உருவானதுதான், இன்று உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெருமை வாய்ந்த "பெல்' (ஆஏஉக) நிறுவனம்.
 - போளூர் சி.ரகுபதி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com