தொப்பி வாங்கலையோ தொப்பி!

சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மனித உடல், ஆஸ்திரியா - இத்தாலி நாடுகளுக்கு இடையேயான மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்டது. சிதைந்த உடலில், அந்த மனிதன் தொப்பி அணிந்திருந்தான்.
தொப்பி வாங்கலையோ தொப்பி!

சுமார் 5,300 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மனித உடல், ஆஸ்திரியா - இத்தாலி நாடுகளுக்கு இடையேயான மலைத்தொடரில் கண்டெடுக்கப்பட்டது. சிதைந்த உடலில், அந்த மனிதன் தொப்பி அணிந்திருந்தான்.

இதேபோன்று சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டது. அதிலும் மனிதன் ஓலைத் தொப்பியை அணிந்திருந்தான்.

கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய 4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓர் ஓவியத்தில், குழந்தையை பயமுறுத்தும் அரக்க முகம் கொண்ட ஒரு மனிதனின் தலையில் தொப்பி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது!

ஒரு காலத்தில், யூதர்கள் தங்களை தனியாக அடையாளம் காட்டிக்கொள்ள மஞ்சள் வண்ணத்தால் ஆன கூம்பு அல்லது சதுர வடிவ தொப்பியை அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர்.

16-ஆம் நூற்றாண்டிலிருந்து ஆண்களுக்கு சமமாக, பெரிய குடும்பங்களின் பெண்களும் தொப்பியை அணியத் தொடங்கினர்.

1930-ஆம் ஆண்டுவாக்கில், உலகம் முழுவதிலும் உள்ள பெண்களிடம் தலை ரோமத்தை ""பாப்'' செய்துகொள்ளும் முறை வேகமாகப் பரவியது! இதனால் தொப்பியின் தேவையும் அதிகரித்தது!

19-ஆம் நூற்றாண்டிலேயே பலர் "பொன்னெட்' என்ற தொப்பியை அணிந்து வந்ததாக வரலாறு கூறுகிறது. 

ஆஸ்திரேலியாவில் "அகுப்ரா' என்ற தொப்பி மிகவும் பிரபலம்.

தென் கொரியாவில், குறிப்பாக மழைக்காலத்தில் பெண்கள் அணியும் தொப்பியின் பெயர் "அயம்'.

இங்கிலாந்து பக்கிங்ஹாம் காவலர்கள் அணியும் தொப்பியின் பெயர், "கரடித் தோல் தொப்பி'.

பிரிட்டிஷார் வழக்கமாக அணியும் தொப்பியை ʻஆர்ள்ள் ர்ச் ற்ட்ங் டப்ஹண்ய்ள்ʼ என்று அழைப்பர்.

கீழ் நோக்கி சரிந்திருக்கும் மென் பருத்தித் தொப்பியை "பக்கெட்' தொப்பி என்று அழைப்பர்.

இந்திய மன்னர்களின் படைகள் அணியும் தொப்பியின் பெயர் "பசுமி' தொப்பி.

பாப் பாடகர்கள் அணியும் தொப்பி என்றே ஒன்று உண்டு. இதனை பிரபல பாப் பாடகி லேடி காகா ஆடம்பரமாய் அணிந்து பாடுவதை இன்றும் காணலாம்.

பொதுவாக தொப்பி வட்டம், நீள் வட்டம் என இருவகைப்படும். 

தொப்பிக்கு மிகவும் பிரபலமான கடை ஜேம்ஸ் லாக் & கோ, லண்டனில் உள்ளது. இது உலகிலேயே மிகப் பழைமையான தொப்பிக் கடை என்று விளம்பரப்படுத்திக் கொள்கிறது.

ஜெர்மனி தொழிலதிபர் டைய்டர் பிலிப், 500-க்கும் அதிகமான தொப்பிகளை சேகரித்து வைத்துள்ளார்.

இது தவிர, அமெரிக்காவில் மிகப் பெரிய தொப்பி அருங்காட்சியகம் போர்ட்லாந்தில் உள்ளது. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட தொப்பிகளை கண்டு களிக்கலாம்.

மேலும் வியன்னா, பாரீஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள நகரங்களிலும் தொப்பி அருங்காட்சியகத்தைக் கண்டு ரசிக்கலாம்.

நம் நாட்டில் திருப்பதி, பழனி உள்ளிட்ட தெய்வீக தலங்களில் மொட்டை போடப்படுவதால், அந்த இடங்களில் தொப்பி விற்பனை அமோகமாக நடைபெறுகின்றன. 

பொதுவாக ஓலையால் பின்னப்பட்ட தொப்பிக்கும், துணியால் ஆன தொப்பிக்குமே மவுசு அதிகம்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது, மிக அதிக ரன்கள், மிக அதிக விக்கெட்டுகளை எடுப்பவர்களை கெüரவிக்கும் விதமாக தொப்பி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com