சிறுவர்களின் உலகம்

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வானரப்படை'. முத்தையா கண்ணதாசன், பஞ்சு சுப்பு, நமோ நாராயணன்
சிறுவர்களின் உலகம்

ஸ்ரீருக்மணி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் படம் "வானரப்படை'. முத்தையா கண்ணதாசன், பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், அவந்திகா, அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நேர் எதிர் படத்தை இயக்கிய ஜெயப்பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார். படம் குறித்து இயக்குநர் பேசும் போது... "குழந்தையாக வந்து குழந்தையாகி போகும் இந்த வாழ்க்கையில், எல்லோரும் மீண்டும் குழந்தையாகி விடுகிற தருணத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம். என்ன முயற்சி செய்தாலும், நம்மால் நுழைந்து விடவே முடியாத உலகம் அது. 9 வயதிலிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகளின் கள்ளம் கபடமில்லாத கலாட்டாக்கள் இந்தக் கதையின் பிரதான பகுதி. நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நாகரீக மாற்றங்கள், பொருளாதார நெருக்கடி, அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, துரித உணவு முறை என ஒவ்வொன்றும் குழந்தைகளின் கோபத்தை சுமந்துக் கொண்டுதான் நிற்கின்றன. நம் நாட்டில் வயது பெண்களை விட, வயது பையன்கள்தான் பாவம். தன் உடலில் நடக்கிற மாற்றங்களை நினைத்து குழம்பி, அநாவசியமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சில நேரங்களில் நாம் மீட்கவே முடியாத தூரத்துக்கு போய் விடுகிறார்கள். நம் வீட்டிலேயே வளர்ந்தாலும், நிறைய டீன் ஏஜ் குழந்தைகள் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் இருக்கிறார்கள். இப்படி நிறைய விஷயங்களை இந்தப் படம் பேசும். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. பிப்ரவரி மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறது'' என்றார் ஜெயப்பிரகாஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com