திருமணத்தால் 4,000 கோடி வருமானம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - ஹாலிவுட் நடிகை மேகன் மெர்க்கல் திருமணத்தால் இங்கிலாந்திற்கு சுமார் நான்காயிரம் கோடி பவுண்டுகள்
திருமணத்தால் 4,000 கோடி வருமானம்!

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - ஹாலிவுட் நடிகை மேகன் மெர்க்கல் திருமணத்தால் இங்கிலாந்திற்கு சுமார் நான்காயிரம் கோடி பவுண்டுகள் வருமானம் கிடைக்கும் என்று அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கணக்கிட்டுள்ளது.

திருணத்தில் கலந்து கொள்ள, திருமணத்தைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் செலவுகள், தங்கள் வீட்டு திருமணமாக நினைத்து இங்கிலாந்து குடிமக்கள் செய்யும் செலவுகள், திருமணத்தை முன்னிட்டு தயாரிக்கப்படும் நினைவுப் பொருள்களின் விற்பனை, விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் என எல்லாம் சேர்த்து இந்த நான்காயிரம் கோடிகளை இங்கிலாந்திற்கு ஈட்டித் தருமாம்.

ஹாரியின் அண்ணன் இளவரசர் வில்லியம்மின் திருமணம் 2012-இல் நடந்தது.அப்போது பல நாடுகளிலிருந்தும், இங்கிலாந்தின் பல நகரங்களிலிருந்தும் சுமார் 3,50,000 பேர் லண்டனில் திருமணத்திற்காக குழுமியிருந்தார்கள்.
- பனுஜா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com