அத்தி மரத்தால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலை

சென்னை பிராட்வேயில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் எனப்படும் பழைய உடையார் கோயில், ஆச்சாரப்பன் தெருவில் உள்ளது.
அத்தி மரத்தால் செய்யப்பட்ட ராமானுஜர் சிலை

சென்னை பிராட்வேயில் உள்ள பெரிய கோயில்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் எனப்படும் பழைய உடையார் கோயில், ஆச்சாரப்பன் தெருவில் உள்ளது. இக்கோயிலில் ஆச்சாரசுவாமியின் (ஸ்ரீ ராமானுஜர்) சிலை இருப்பதாலேயே இந்தத் தெருவுக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாகக் கூறப்படுவதுண்டு.

கோயில் நுழைவுவாயிலில் உள்ள ஐந்தடுக்கு கோபுரம் இந்தப் பகுதியில் உள்ள உயரமான கோபுரங்களில் ஒன்றாகும். பிரதான கடவுளான நான்கு கரங்களுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற நிலையில் வீற்றிருக்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்கிப் பிடிக்க, கீழ் வலது கரம் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் "அபய ஹஸ்தா' நிலையிலும், கீழ் இடது கரம் இடுப்பில் வைத்தபடியும் ஆதிகேசவ பெருமாள் வீற்றிருக்கிறார். பெருமாள் சந்நிதிக்கு அருகில் தெற்கு முகமாக ஸ்ரீ ராமானுஜர் வீற்றிருக்கிறார். இந்த சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது. தற்செயலாக, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள விஷ்ணு சிலையும் அத்தி மரத்தாலேயே செய்யப்பட்டது ஆகும்.

ராமர், ஸ்ரீநிவாச பெருமாள், பக்த ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள், ஆண்டாள் வைணவ குரு ஆளவந்தார் (யமுனாச்சாரியர்), லட்சுமி, ஹயக்ரீவர், கண்ணன் (கிருஷ்ணா), துர்தேவதையை காலில் போட்டு மிதிக்கும் வீர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகியவை இக்கோயிலில் உள்ள மற்ற சிலைகள்.

ஹிரண்யகசிபுவை மடியில் கிடத்திய உக்கிர நரசிம்மரின் சிற்பம், பித்தளை முலாம் பூசிய தூணில் செதுக்கப்பட்டுள்ளது. தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்டுள்ள விஷ்ணுவின் மற்ற அவதாரங்களின் சிற்பங்களோடு, இந்தத் தூணும் அங்கு இடம்பெற்றுள்ளது.

தாயாரின் பெயர்

இக்கோயிலில் லட்சுமி தேவி "யதிராஜவல்லி தாயார்' என்று அழைக்கப்படுகிறார்.

வழிபாட்டு முறை

வைகானச ஆகமத்தின்படி இந்தக் கோயிலின் வழிபாட்டு முறை பின்பற்றப்படுகிறது. 

பிரத்யேக சிலை

ஸ்ரீ ராமானுஜரின் அரிய விக்ரகம் இங்கு உள்ளது.

விமானத்தின் பெயர் 

கர்ப்பகிரத்தின் மேல் இருக்கும் விமானத்தின் பெயர் ஆனந்த விமானம்.

அமைவிடம்

பாரிமுனை ஆச்சாரப்பன் தெருவில் ஆதிகேசவ பெருமாள் கோயில் எனப்படும் பழைய உடையவர் கோயில் உள்ளது. கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு எதிரே இந்தத் தெரு உள்ளது.

கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர் 
- கோயில் சிற்பங்கள் ஆய்வாளர்

தமிழில்: பிரவீண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com