பிடித்த பத்து: பார்வையற்றவர்களுக்கு உதவப் பிடிக்கும்!

சிறந்த கர்நாடக இசைப் பாடகரும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகருமான, பி. உன்னிகிருஷ்னன் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்.
பிடித்த பத்து: பார்வையற்றவர்களுக்கு உதவப் பிடிக்கும்!

சிறந்த கர்நாடக இசைப் பாடகரும், தேசிய விருது பெற்ற பின்னணிப் பாடகருமான, பி. உன்னிகிருஷ்னன் தனக்கு பிடித்த பத்து பற்றி கூறுகிறார்.

குருநாதர்கள்: நான் ஒரு குருநாதரிடம் இசையை கற்கவில்லை. அதனால்தான் "குருநாதர்கள்' என்று தலைப்பிட்டுள்ளேன். வி.எல். சேஷாத்திரி, டாக்டர். எஸ். ராமநாதன், சாவித்திரி சத்யமூர்த்தி, கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டி.பிருந்தா, டி.விஸ்வநாதன், டி. எஸ்.நாராயணஸ்வாமி, எஸ்.ஆர்.ஜானகிராமன் ஆகியோர்கள் என்னை இந்த நிலைக்கு உயர்த்திவிட்டவர்கள். 

கிரிக்கெட்: என்னுடைய ஆரம்ப நாட்களில் நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரன்தான். முதல் டிவிசன் லீகில் விளையாடி இருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரரான சஞ்சய் மஞ்ச்ரேகருடன் விளையாடி இருக்கிறேன். தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன் இவர்களுடன் விளையாடியதை இன்னும் நான் மறக்கவில்லை. இன்றும் இந்த விளையாட்டை ஆடவேண்டும் என்ற ஆசை உண்டு. 

கார்: சிறுவயதில் இருந்தே கார்கள் மீது ஒரு அலாதியான பிரியம் உண்டு. அம்மா வாங்கி கொடுத்த சிறிய மற்றும் பெரிய கார்கள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. எனது ஆஙர காரை ஒட்டிக் கொண்டு குடும்பத்துடன் சிறிது தூரம் போவது பிடித்தமான வழக்கம். அதேபோல், புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது ‘டெஸ்ட் டிரைவ்' என்று சொல்வார்களே, அதைச் செய்ய விரும்புவேன். 

ஆரோக்கியம்: சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும் என்று கூறுவார்கள். அதை பேணிப் பாதுகாக்க நான் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வேன். பிடித்த மற்றொரு விளையாட்டு டென்னிஸ். இன்று நான் அதிகமாக காலையில் விளையாடுவது பாட்மிண்டன்தான். அதற்கு முன்போ அல்லது பின்போ உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று சிறிய உடற்பயிற்சிகளை 
செய்வேன். 

திரைப்படம்: நல்ல திரைப்படங்கள் எதுவானாலும் எனக்கு பிடிக்கும். குறிப்பாக ஆங்கில திகில் படங்கள் என்றால் பார்க்காமல் இருக்க மாட்டேன். என்னுடைய திரைப்பட கதாநாயகன், எல்லோருக்கும் பிடித்த நடிகர்தான். அவர் வேறு யாருமல்ல, குங்ஃபூ புகழ் புரூஸ்லீ தான். "என்டர் தி டிராகன்" படத்தை மட்டும், நான் 100 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன். அவரது சண்டை போடும் ஸ்டைல் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. 

கடிகாரங்கள்: நான் ஒரு கடிகார பைத்தியம். புதிதாக எந்த கடிகாரம் பார்த்தாலும் கையில் பணமிருந்தால் அதை வாங்கி விடுவேன். இதுபோன்று வித்தியாசமான சுமார் 30 கடிகாரங்கள் என்னிடம் உள்ளன. ஒருமுறை நான் வெளிநாட்டிற்கு சென்றபோது என் நண்பர் ஒருவர் எனது கைக் கடிகார ஆசையை தெரிந்து கொண்டு ஓர் இடத்திற்கு அழைத்து சென்றார். அங்கு ஒரு கடிகாரத்தின் விலை, ஒரு லட்சத்தில் இருந்து 30 லட்சம் வரை இருந்தது. என் கண்ணை பறித்ததுடன் பர்ûஸயும் எடுக்கத் தூண்டியது. பேரம் பேசி வாங்கினேன். இன்று என்னிடம் உள்ள விலை உயர்ந்த கடிகாரம் என்றால் அதுதான். குறைந்த விலை கடிகாரம் என்றால் ரூபாய் 10 ஆயிரத்தில் ஒரு கடிகாரம் உள்ளது. 

ருசியான சாப்பாடு: என் மனைவி சமையல் என்றுமே என்னை மகிழ்விக்கும். ஆனாலும் மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ வெளியே போய் சாப்பிடும் பழக்கமும் உண்டு. வெளிநாட்டிற்கோ அல்லது வெளி மாநிலத்திற்கோ சென்றால் அந்தப் பகுதியின் ருசியான வகை சாப்பாட்டை வாங்கி சாப்பிடுவேன். 

வயநாடு: என் மனைவிக்கு வயநாட்டில் ஒரு எஸ்டேட் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறையேனும் அங்கு சென்றுவிடுவோம். அமைதியான இடம். சந்தோஷமாக நடந்து செல்லலாம். நான் இளைஞனாக இருந்த போது பலமுறை வந்து சென்றுள்ளேன். அருகில் மலை உள்ளதால் ட்ரெக்கிங் (பழ்ங்ந்ந்ண்ய்ஞ்) செல்வோம். நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை எங்களுக்கு தெரிந்த ஒரு வன அதிகாரியுடன் கிளம்பிச் சென்றோம். கிட்டத்தட்ட பகல் முழுவதும் நடைபயணம் தான். கையில் இருந்த குடிநீரும் தீர்ந்து விட்டது. தாகம் எடுக்க என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தமிழ்நாட்டின் எல்லை வரை வந்து விட்டோம். திரும்பி நடக்க ஆரம்பித்தோம். இருட்டு எங்களை மேலும் பயம் கொள்ள வைத்தது. எப்படியோ இரவு சுமார் 10 மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். 

இசையும், படிப்பும் இரு கண்கள்: எங்கள் வீட்டில் தம்புரா நாதம் 24 மணி நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கும். அப்படி வீட்டை கட்டும்போதே ஒவ்வொரு அறையிலும் ஒலிபெருக்கி வைத்து அந்த ஒலி கேட்கும் வகையில் அமைத்துள்ளோம். ஆப்பிள் கம்பெனி கொண்டுவந்த ஐ போட், ஐ பேடு போன்ற பல பொருள்கள் என் வீட்டில் உள்ளன. அதன் மூலம் வரும் இசையையும் நாங்கள் கேட்காத தவறுவதில்லை. படிப்பும் என்னோடு கூடப் பிறந்தது என்று தைரியமாக கூறலாம். ஆங்கிலத்தில் மருத்துவ கதைகள் படிக்கப் பிடிக்கும். தர்க்ஷண்ய் இர்ர்ந் எழுதிய ஆங்கில கதை புத்தகங்களை விரும்பிப் படிப்பேன். 
சுத்தம்: உடல் தூய்மையும், மன தூய்மையும் ஒரு மனிதனுக்கு என்றும் தேவை என்று நினைக்கிறேன். அதே போன்று நாம் வாழும் வீட்டையும், தெருவையும் சுத்தமாக வைத்திருக்க முயல வேண்டும். எங்கள் வீட்டை தூசி இல்லாமல் வைக்க தினமும் துடைத்து சுத்தமாக வைத்துள்ளேன். கண் பார்வையற்றவர்களுக்கு என்னாலான உதவியை இன்றும் செய்து வருகிறேன். அதிக அளவில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com