360 டிகிரி

உலக புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் 29-03-1948 அன்று ஒருநாள் மட்டும் நீர் விழவில்லை. அதிக குளிரின் காரணமாக பனிக்கட்டிகள் நீர் விழும் பாதையை அடைத்துக் கொண்டதுதான் காரணம். 

கைரேகை நிபுணர் ராமானுஜம்
* கணிதமேதை ராமானுஜம் கைரேகை பார்ப்பதிலும் நிபுணராவார். கைரேகை பார்த்து துல்லியமாக பலன் சொல்வார். தான், 35 வயதுக்கு மேல் வாழ மாட்டேன் என்று தன் ரேகையைப் பார்த்தும் சொல்லியிருக்கிறார். அவரின் கணக்கு தவறவில்லை.
-ஆர்.ராதிகா

* செல்லிடப்பேசியில் உள்ள ரீ சார்ஜ் செய்யக்கூடிய நிக்கல் காடியம் பாட்டரி ஆறு லட்சம் லிட்டர் தண்ணீரை மாசுபடுத்தும் ஆற்றல் கொண்டது.

* உலக புகழ்பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சியில் 29-03-1948 அன்று ஒருநாள் மட்டும் நீர் விழவில்லை. அதிக குளிரின் காரணமாக பனிக்கட்டிகள் நீர் விழும் பாதையை அடைத்துக் கொண்டதுதான் காரணம். 

* சமையல் எரிவாயுவிற்கென மணம் கிடையாது. சமையல் எரிவாயு கசிவு ஆபத்தை உண்டாக்கும் என்பதால் கசிவை உணரும் வண்ணம் அதனுடன் மணம் (வாடை) சேர்க்கப்படுகிறது.
- எம்.அசோக்ராஜா

* இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உணவு விடுதிகளிலும், பொது இடங்களிலும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டபோது, அவற்றை தீக்குச்சி கொண்டு பற்ற வைக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை தாங்கிய அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டன.

* உலகில் ஐஸ்லாந்து நாட்டில் மட்டுமே மறுசுழற்சி எரிசக்தி மூலம் முழுமையாக மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
- க.ரவீந்திரன்

* நெல்லிக்காய் நம் உடலில் தோன்றும் நஞ்சுகளை வெளியேற்றி இளமையாக இருக்க வழி செய்கிறது. உடல் செல்கள் நன்கு செயல்பட உதவி புரிகிறது. நெல்லிக்காய் ஈரலை தூண்டி, நன்கு செயல்பட வைத்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. கண்களுக்குத் தெளிவைக் கொடுக்கிறது. தலைமுடி உதிராமல் பாதுகாக்கும். மேலும் தலைமுடி வளரவும் உதவும். நரைமுடி தோன்றுவதைத் தவிர்க்கிறது.
-நெ.இராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com