ஸ்ரீரங்கம் கல்வெட்டு கூறும் அரிய தகவல்கள்

பூலோக வைகுண்டம், புண்ணிய பூமி, முக்தித் தலம் என்று வைணவர்களால் போற்றப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள ஊர் ஸ்ரீரங்கம்; 236 அடி உயரம்! ஏழு பிராகாரங்கள்
ஸ்ரீரங்கம் கல்வெட்டு கூறும் அரிய தகவல்கள்

பூலோக வைகுண்டம், புண்ணிய பூமி, முக்தித் தலம் என்று வைணவர்களால் போற்றப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள ஊர் ஸ்ரீரங்கம்; 236 அடி உயரம்! ஏழு பிராகாரங்கள் உடைய ஒரே கோயில் ஸ்ரீரங்கம். வைணவத் திருப்பதிகள் 108-இல் முதலிடம் வகிப்பது. இராமாயணம் அரங்கேறிய இடம். 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். இப்படி இக்கோயிலின் பெருமைகளைக் கூறிக்கொண்டே இருக்கலாம். இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பலஅரிய தகவல்களைத் தருகின்றன. 

அரங்கரின் இரண்டாம், மூன்றாம், நான்காம் பிராகாரங்களின் மதிற் சுவர்களில் கல்வெட்டுகள் பல நிறைந்துள்ளன. இக்கல்வெட்டுகள் 700க்கும் மேலானவை. இவற்றை சோழர், பாண்டியர், ஹொய்சாளர், விஜயநகர, நாயக்கர் காலக் கல்வெட்டுகள் எனப் பிரிக்கலாம். 

இவற்றில் முதலாம் ஆதித்தன் (கி.பி.871-907) காலத்து கல்வெட்டே முதல் கல்வெட்டெனக் கருதப்படுகிறது. அரங்கருக்கு உள்ள நிலபுலன்கள், செய்ய வேண்டிய பூஜை முறைகள், அளிக்கப்பட்ட நன்கொடைகள், நடைபெறும் விழாக்கள் பற்றியும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன. 

அவற்றில் முக்கியமானவை சித்திரைத் திருநாள், விருப்பன் திருநாள், தைத்திருநாள், பூபதி உடையார் திருநாள், மாசி மாத தெப்பத்திருநாள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருநாள், திருப்பவித்திரத் திருநாள், வசந்தத் திருநாள் முதலியவை. கீழ்க்காணும் கல்வெட்டுகள் முக்கியத் திருவிழாக்களைப் பற்றிக் கூறுகின்றன.÷

1.முதலாம் பராந்தகன் (கி.பி. 907 - 953) பங்குனி உத்திரத் திருநாள், ஏகாதசி, திருமஞ்சனம்.

2.முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1070 -1120) பங்குனித் திருநாள், 

3. கிருஷ்ணதேவராயர் (கி.பி. 1521) ஐப்பசித்தேர்.

4.திருமலை மகாராயர் (கி.பி. 1529) பங்குனித் திருநாள்.
5.சதாசிவராயர் (கி.பி.1564 -1566) ஆதி பிரம்மாத் திருநாள் கொடியேற்றம், சின்னபெருமாள் வடகாவேரி எழுந்தருளி திருமஞ்சனம்.
6.ஸ்ரீரங்கராயர் (கி.பி.1570) ஆதி பிரம்மாத் திருநாள்
7.வேங்கட தேவராயர் (கி.பி.1588) ஆதிபிரம்மாத் திருநாள், பூபதி திருநாள், விருப்பண்ண திருநாள், கி.பி.1596-பங்குனித் திருநாள், பெருமாள் உறையூர், நாச்சியார்கோயில் செல்வது.
8.மூன்றாம் ரெங்கமன்னன் கி.பி.1648 ஆதிபிரம்மாத் திருநாள், கி.பி.1661-பெருமாள் உறையூர் செல்வது.
9.நாயக்கர் காலம் கி.பி.1667 பெருமாள் எல்லைக்கரை செல்வது.
10.சோழர்கால கல்வெட்டுகளில் 82 முதலாம் குலோத்துங்கன் காலத்தவை.
11.விருப்பண்ண உடையார் (கி.பி.1377 - 1404) சித்திரைமாத விருப்பன் திருநாள்.
12.வீரராமநாதன் கி.பி.1263 வைகுண்ட ஏகாதசி.
13.கிருஷ்ண தேவராயர் கி.பி.1514 கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம்.
14.வேங்கடராயர் (கி.பி.1597) சித்திரைப் பெüர்ணமி.
15.விக்கிரம சோழன் ஏகாதசி திருமஞ்சனம், அமாவாசை அமுதுசெய்தல்.
கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ள திருவிழாக்கள் இப்போது நடைபெற்றபோதிலும் அக்காலத்தில் இருந்ததைவிட சிறிது மாறுபட்டும், சிறிது ஒத்தும் இருப்பதைக் காணமுடிகிறது. அக்கால ஓலைச் சுவடிகளிலும், செப்பேடுகளிலும் கல்லிலும் விட்டுச்சென்ற கருத்துகள் பிற்கால மக்களுக்குப் பாடமாகவும், வழிகாட்டியாகவும் பயன்பட்டு வருவது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றன.

- ஸ்ரீரங்கம் கே.சண்முகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com